நிலை மின்சாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிலை மின்சாரம் (Static Electricity) என்பது ஒரு பொருளின் மேற்பரப்பிலோ அல்லது உட்பரப்பிலோ உள்ள மின்னேற்றத்தின் சமநிலை மாறுபாடால் ஏற்படுவதாகும். இது மின்கடத்திகளின் மூலம் ஆற்றலைப் பரிமாற்றும் மின்னோட்டத்திலிருந்து முரண்பட்டு மின்னோட்டத்தினாலோ, மின் வெளியேற்றம் மூலமோ நகர்த்தப்படும் வரை ஒரிடத்தில் நிலைத்திருப்பதால் நிலைமின்சாரம் எனப்படும்.
தொடர்பிலிருந்த இரு மேற்பரப்புகள் தனியே பிரிந்தபின், அதில் ஒரு மேற்பரப்பேனும் மின்னோட்டத்துக்குத் தடையாய் இருக்குமாயின் அதில் ஒரு மின்னேற்றம் உருவாகும். இந்த மின்னேற்றம் நிலத்தை நோக்கி நகர, மக்கள் காரணமாக இருக்கும்பொழுது இதன் விளைவை மக்களால் பொறியோசையாகக் கேட்கவோ, அதிர்வாக உணரவோ அல்லது ஒரு சிறு தீப்பொறியாக காணவோ முடிகிறது. நிலை மின்னிறக்கம் என்னும் இந்த பரிச்சியமான நிகழ்வு, மின்னேற்றம் நடுவுநிலமையை அடையும்போது ஏற்படுகிறது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads