நீரியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீரியல் (Hydrology) என்பது புவியில் உள்ள நீரின் நகர்ச்சி, பரவல் மற்றும் அதன் தரம் தொடர்பான படிப்பாகும். இது நீர்ச்சுழற்சி, நீர்வளங்கள், சூழலியல் நீர்ப்பயன்பாட்டு நிலைத்துவம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. நீரியல் துறை வல்லுநர் நீரியலாளர் எனப்படுகிறார். அவர் பொதுவாக பின்வரும் துறைகளில் பங்காற்றுகிறார்: புவியியல் அல்லது நிலவியல், சூழலியல், இயற்புவியியல் அல்லது குடிசார் மற்றும் சூழல் பொறியியல். நீர்மாரியியல், புறப்பரப்பு நீரியல், வடிகால் மற்றும் வடிநில மேலாண்மை, நீர்த்தரவியல் ஆகியன இதன் உட்பிரிவுகள். இப்பிரிவுகளில் நீரே முதன்மையான ஆய்வுக்கூறு. பெருங்கடலியலிலும், மாரியியலிலும் நீரானது பல்வேறு கூறுகளுள் ஒன்றாகவே இருப்பதால் அவை நீரியலின் உட்பிரிவாகக் கருதப்படுவதில்லை.[1][2][3]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads