நீர்ப்போக்கு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீர்ப்போக்கு (Dehydration) என்பது உடலியங்கியலில் உடலுக்குத் தேவையான மொத்த நீரின் அளவில் ஏற்படும் பற்றாக்குறையாகும்.[1] இதை நீரிழப்பு என்ற பெயராலும் அழைக்கலாம். இப்பற்றாக்குறையால் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இடையூறுகள் உண்டாகும். பொதுவாக உடற்பயிற்சி, நோய் அல்லது அதிக சுற்றுச்சூழல் வெப்பநிலை காரணமாக நீர் உட்கொள்ளலையும் மீறும் போது நீர்ப்போக்கு நிகழ்கிறது.

பெரும்பாலான மக்கள் மொத்த உடல் நீரில் 3-4% நீர் குறைவதை சிரமம் அல்லது பாதகமான உடல்நல பாதிப்புகள் இல்லாமல் பொறுத்துக்கொள்ள முடியும். 5-8% நீர் குறைவு சோர்வு மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். மொத்த உடல் நீரில் 10% க்கும் அதிகமான நீர் இழப்பு கடுமையான தாகத்துடன் உடல் மற்றும் மனச் சரிவை ஏற்படுத்தும். உடல் நீரில் 15 முதல் 25% வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது.[2] இலேசான நீரிழப்பு தாகம் மற்றும் பொதுவான அசௌகரியம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக வாய்வழி நீரேற்றம் மூலம் இச்சிக்கல் தீர்க்கப்படுகிறது.

நீர்ப்போக்கு நோயால் இரத்தத்தில் சோடியம் அயனிகளின் அளவு அதிகமாகும். இது குருதியோட்டக் குறைவிலிருந்து வேறுபட்டதாகும். அதாவது இரத்தத்தின் கன அளவு குறிப்பாக இரத்த பிளாசுமா இழப்பு ஏற்படுவதாகும்.

நாள்பட்ட நீர்ப்போக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கும், நாள்பட்ட சிறுநீரக நோயின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.[3][4]

Remove ads

அறிகுறிகள்

Thumb
நீர்ப்போக்கின் குறிகாட்டியாக சிறுநீரின் நிறம்[5]
கழுத்தின் இரத்த நாளங்களில் கடுமையான நீரிழப்பு நோயைக் கண்டறிய உதவும் மீயொலி[6]

தாகம் மற்றும் தலைவலி, பொது அசௌகரியம், பசியின்மை, குமட்டல், சிறுநீரின் அளவு குறைதல் (நீரிழப்பிற்கு பாலியூரியா காரணமாக இருந்தால் தவிர), குழப்பம், விவரிக்க முடியாத சோர்வு, ஊதா நிற விரல் நகங்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பியல் மாற்றங்கள் நீரிழப்புக்கான அறிகுறிகளாகும்.[7] உடலின் மொத்த நீர் இழப்புடன் நீர்ப்போக்கின் அறிகுறிகள் பெருகிய முறையில் தீவிரமடைகின்றன. 1-2% உடல் நீர் இழப்பு, இலேசான நீர்ப்போக்கு என்று கருதப்படுகிறது, இந்நிலை அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கிறது.[8] 50 வயதிற்கு மேற்பட்டவர்களில், உடலின் தாக உணர்வு வயதுக்கு ஏற்ப குறைகிறது. இளம் வயதினருக்கும் வயதானவர்களுக்கும் இடையில் திரவ உட்கொள்ளலில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டது.[9] வயதானவர்களில் பலருக்கு நீர்ப்போக்கு அறிகுறிகள் உள்ளன. நீர்ப்போக்கு வயதான மக்களின் நோயுற்ற தன்மைக்கு பங்களிக்கிறது. குறிப்பாக வெப்பமான வானிலை போன்ற கட்டுப்பாடற்ற நீர் இழப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் இந்நிலை உண்டாகிறது.

Remove ads

காரணம்

வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் உழைப்பது, அதிக உயரத்தில் வசிப்பது, தடகள சகிப்புத்தன்மை, வயதான பெரியவர்கள், கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்களுடன் வாழும் மக்கள் ஆகியவை நீர்ப்போக்கிற்கான காரணங்கள் என்றாலும் இவற்றை மட்டும் இதற்கான எல்லைகளாகக் கூற இயலாது.[10]

பல்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துவதான்ல் இதன் பக்க விளைவுகளாகவும் நீர்ப்போக்கு வரலாம்.[11]

பெரியவர்களில், தாகத்தை உணரும் அறிகுறியே இல்லாமல் நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இரத்தச் சக்கரை அளவு அதிகமாதல் இதற்கான முக்கிய காரணமாகும்.[12] அதிகப்படியான நீர் இரண்டு வழிகளில் உடலை விட்டு வெளியேறலாம். அவை உணர்வுசார் நீரிழப்பு, உணர்வு சாரா நீரிழப்பு என்பன அவ்விரண்டு வகை வகைகளாகும். சவ்வூடுப்பரவலால் சிறுநீர்ப் பெருகுதல், வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை உணர்வுசார் வகையிலும் தோல் மற்றும் சுவாசக்குழாய் வழியாக நீர் வெளியேறுதல் உணர்வு சாரா நீரிழப்பு என்றும் கூறப்படுகிறது. மனிதர்களில், உடலில் உள்ள நீர் சமநிலையைப் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மற்றும் நிலைகளால் நீரிழப்பு ஏற்படுகிறது. இவை முதன்மையாக பலவீனமான தாகம்/தண்ணீர் அணுகல் அல்லது அதிகப்படியான சோடியம் மூலம் நிகழ்கின்றன.[13]

Remove ads

நோய் கண்டறிதல்

வரையறை

சுவாசம், சிறுநீர் கழித்தல், வியர்வை, அல்லது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட காரணங்கள் மற்றும் சாதாரண உடலியல் செயல்முறைகளால் இழந்த நீரை நீர் உட்கொள்ளல் மூலம் மாற்றாதபோது நீர்போக்கு ஏற்படுகிறது. நீரிழப்பு கடுமையாகும் போது உயிருக்கு ஆபத்தானதாகவும் வலிப்புத்தாக்கங்கள் அல்லது சுவாசம் நின்று போவதற்கும் வழிவகுக்கலாம். நீரேற்றம் மிக வேகமாக இருந்தாலும் சவ்வூடுபரவல் மூலம் பெருமூளையில் வீக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது.[14]

இரத்த பிளாசுமாவின் அளவு குறைவான குருதியோட்டக் குறைவும் நீரிழப்பு என்ற சொல்லால் சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இவை இரண்டும் மனிதர்களில் உள்ள சுயாதீன வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிகிச்சையை வழிநடத்துவதில் இவ்வேறுபாடு முக்கியமானதாகும்.[15]

உடல் பரிசோதனை

தோல் விறைப்பு சோதனை நீர்போக்கு நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையாகும். தோல் விறைப்புச் சோதனையானது நோயாளியின் உடலில், முன்கை அல்லது கையின் பின்புறம் போன்ற இடங்களில் தோலைக் கிள்ளுவதன் மூலம், அது எவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்பதைப் பார்ப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.[16]

வருமுன் காத்தல்

  • ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.
  • வாந்தி அல்லது வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சிக்கு முன், போது மற்றும் பிறகு, விளையாட்டு விளையாடுவது அல்லது தீவிரமான உடல் செயல்பாடுகளைச் செய்வது அவசியம்.
  • உடற்பயிற்சிக்குப் பிறகு மின்பகுளிகளை உட்கொள்ளுங்கள்.
  • வெயில் காலங்களில் நேரடியாக வெளியே செல்வதை தவிர்க்கவும்.
  • எந்தவொரு கடுமையான செயலையும் செய்யாவிட்டாலும், ஒரு நாளிற்கு என பரிந்துரைக்கப்பட்ட தண்ணீரை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.
  • வழக்கமான நடவடிக்கைகளின் போது உண்டாகும் தாகத்திற்கு நீரருந்துதல் பொதுவாக சரியான நீரேற்றத்தை பராமரிக்க போதுமான வழிகாட்டியாகும்.[17]

எடை, ஆற்றல் செலவு, வயது, பாலினம், உடல் செயல்பாடு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் மரபியல் ஆகியவற்றைப் பொறுத்து குறைந்தபட்ச நீர் உட்கொள்ளல் தனித்தனியாக மாறுபடும்.[18][19] உடற்பயிற்சி, சூடான சூழலில் வெளிப்படுதல் அல்லது தாகம் குறைவதால், கூடுதல் தண்ணீர் தேவைப்படும். போட்டியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தாகத்திற்கு குடிப்பதால், எடை இழப்பு இருந்தபோதிலும், செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. மேலும் 2010 ஆம் ஆண்டு வரை, தாகத்திற்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது மற்றும் உடற்பயிற்சியின் போது எடையை பராமரிப்பது நன்மை பயக்கும் என்று அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை.[20]

வெதுவெதுப்பான அல்லது ஈரப்பதமான காலநிலையில், அல்லது அதிக உழைப்பின் போது, நீர் இழப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். ஏனெனில் மனிதர்களுக்கு உண்டாகும் வியர்வை பெரிய மற்றும் பரவலாக மாறக்கூடிய திறன் உள்ளது. ஆண்களில் முழு உடல் வியர்வை இழப்புகள் போட்டி விளையாட்டின் போது 2 லிட்டர்/மணி என்பதைவிட அதிகமாக இருக்கலாம், 3-4 லிட்டர்/மணி என்ற விகிதம் குறுகிய கால, அதிக-தீவிர உடற்பயிற்சியின் போதும் காணப்படுகின்றன.[21] 4-5 மணிநேரம் உடற்பயிற்சி செய்து வியர்க்கும் பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு 50 மில்லிமோல்/லிட்டருக்குக் குறைவான சோடியம் வியர்வையுடன் வெளியேறும். இது மொத்த உடல் சேமிப்பில் 10%க்கும் குறைவாகும். (மொத்த சேமிப்பு தோராயமாக 70-கிலோ நபருக்கு 2,500 மில்லிமோல் அல்லது 58 கிராம் ஆகும்.[22] இந்த இழப்புகள் பெரும்பாலான மக்களால் நன்கு பொறுத்துக்கொள்ளப்படுகின்றன. திரவ மாற்று பானங்களில் சோடியத்தை சேர்ப்பது சில தத்துவார்த்த நன்மைகளைக் கொண்டுள்ளது.[22] மேலும் இந்த திரவங்கள் குறைவழுத்தம் இருக்கும் வரையில் சிறிதளவு அல்லது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

Remove ads

நீரிழப்புக்கான சிகிச்சை

சிறிய நீரிழப்புக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையானது குடிநீர் மற்றும் மின்பகுளிகளிகளின் உதவியுடன் திரவ இழப்பை ஈடுசெய்வதாகும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. சாதாரண நீர் இரத்த பிளாசுமாவின் அளவை மட்டுமே மீட்டெடுக்கிறது. கரைப்பான அளவுகளை நிரப்புவதற்கு முன் தாக இயக்கத்தைத் தடுக்கிறது.[23] திட உணவுகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் திரவ இழப்பை மாற்ற உதவும்.[24] நீரிழப்பு தீர்க்கப்படும்போது சிறுநீரின் செறிவு மற்றும் அதிர்வெண் இயல்பு நிலைக்குத் திரும்பும்.[25]

புதிய நீர் கிடைக்காத போது (எ.கா. கடலில் அல்லது பாலைவனத்தில்), கடல் நீர் அல்லது கணிசமான ஆல்ககால் செறிவு கொண்ட பானங்கள் நீரிழப்பை மேலும் மோசமாக்கும். சிறுநீரில் கடல்நீரைக் காட்டிலும் குறைவான கரைப்பான செறிவு உள்ளது; அதிகப்படியான உப்பை அகற்ற சிறுநீரகங்கள் அதிக சிறுநீரை உருவாக்குவதற்கு இது தேவைப்படுகிறது. இதனால் கடல் நீரிலிருந்து உட்கொள்ளும் தண்ணீரை விட அதிக நீர் இழக்கப்படுகிறது.[26] ஒரு நபர் நீரிழப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டால், நரம்பு வழி சிகிச்சையையும் பயன்படுத்தலாம். [27][28][29][30]

வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சலால் நீரிழப்பு நோயால் பாதிக்கப்படும் கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் மற்றும் உப்பு அடங்கிய வாய்வழி நீரேற்றக் கரைசல் கொடுக்கப்படுகிறது.

மயக்கம், சுயநினைவின்மை அல்லது பிற கடுமையான அறிகுறிகள் (நோயாளி நிமிர்ந்து நிற்கவோ அல்லது தெளிவாகச் சிந்திக்கவோ இயலாத நிலை) வெளிப்படும் நீரிழப்பு கடுமையான நிகழ்வுகளுக்கு, அவசர கவனம் தேவை. மாற்று மின்பகுளிகளீன் சரியான சமநிலையைக் கொண்ட திரவங்கள் மதிப்பிடப்பட்டு வாய்வழியாக அல்லது நரம்பு வழியாக வழங்கப்படுகின்றன.[31] கடுமையான நீரிழப்புக்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads