நீர்மூழ்கிக் குண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீரின் மேற்பரப்புக்கு மேலிருந்தோ அல்லது நீருக்கடியிலிருந்து ஏவப்பட்டு நீருக்கடியில் தானாக உந்திச் சென்று இலக்கைத் தாக்ககூடிய கணை நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) எனப்படுகிறது. இந்நீர்மூழ்கிக் குண்டுகள் இலக்கைத் தொட்டவுடன் அல்லது இலக்கை அண்மித்தவுடன் வெடிக்கக் கூடியன. நீர்கண்ணிகள் நீர்மூழ்கிக் குண்டை ஒத்தனவாயினும் இவை தானாக உந்திச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. இவை கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள், வான்கலங்கள் எனப் பலதரப்பட்ட இடங்களிலிருந்து ஏவப்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கப்பல்களுக்கு எதிராக நீர்மூழ்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டாலும் தற்போது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கெதிராகவே முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |

Remove ads
வரலாறு
பிரிட்டனைச் சேர்ந்த இராபர்ட் ஒயிட்ஹெம் என்பவர் 1866-ஆம் ஆண்டு டார்பிடோ என்ற கடற்போர் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அது சுருட்டு போன்று நீண்ட வடிவம் கொண்ட தானியங்கி குண்டு. நீருக்கடியில் அதிவேகமாகச் செல்லக் கூடியது. தற்போது அதில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அமைப்பு
குண்டு பின்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில், சதுர அங்குலத்துக்கு 20 ஆயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கக்கூடிய காற்றுக் கலன்கள் உள்ளன. நடுப்பகுதியில் கியர், சார்ஜிங் வால்வு, ஸ்டாப் வால்வு போன்ற கருவிகள் உள்ளன. வால்பகுதிதான் மிகவும் முக்கியமானது. இங்குதான் என்ஜின், ஸ்டியரிங், டார்பிடோவை இயக்கும் எரிபொருள் ஆகியவை உள்ளன. அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணிய கருவிகளும் இப்பகுதியில்தான் இருக்கும்.
Remove ads
தாக்கம்
நீருக்கடியில் அதிவேகமாகப் பாய்ந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கப்பலையோ, நீர்மூழ்கிக் கப்பலையோ ஊடுருவித் தாக்கும். தாக்கிய வேகத்திலேயே இது வெடிக்கும். இதனால் அந்தக் கப்பலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். டார்பிடோவின் அளவுக்கு ஏற்ப அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். முழுக் கப்பலையுமே அழித்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த டார்பிடோக்களும் உள்ளன.
வகைகள்
நவீன நீர்மூழ்கிக் குண்டுகளை
- நேர்கோட்டில் பயணிப்பன
- தானியக்கமாக (இலக்கின் வெப்பத்தைக் கொண்டு) இலக்கை அடையக் கூடியன
- கம்பி மூலம் கட்டுப்படுத்தக் கூடியன என வகைப் படுத்தலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads