நீர்வர்ணம்

From Wikipedia, the free encyclopedia

நீர்வர்ணம்
Remove ads

நீர்வர்ணம் (Watercolour) என்பது ஓவியம் வரையப் பயன்படுத்தும் திரவ வர்ணமாகும். நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தகுந்த அளவில் கலந்து பயன்படுத்துவர்.

Thumb
நீர்வர்ணம்

நீர்வண்ண ஊடகம்

Thumb
நீர் வண்ணத்தில் வரைந்த ஓவியம்

நீர்வண்ண ஊடகம் என்பது ஓவியத்தில் ஒரு பிரிவைக் குறிக்கும். இதில் சிகப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்கள் முதன்மை நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முதன்மை நிறங்கள் கொண்டு மற்ற வண்ணங்களை உருவாக்கும் முறை வண்ணச் சக்கரம் மூலம் விளக்கப்படுகிறது.[1]மற்ற வண்ண ஊடகங்களை விட நீர்வண்ண ஓவியத்தில் தவறுகள் செய்துவிட்டால் திருத்துவது சிரமம். இந்தியாவில் இதில் முதன்மையான ஓவியர்களாக வாசுதேவ காமத்,[2] மணியம் செல்வன் போன்ற பல ஓவியர்கள் உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads