நீர்வழியிடை நிலவழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர்வழியிடை நிலவழி (Portage) அல்லது நீர்வழியிடை நிலவழிச் செல்கை (portaging) என்பது, ஆற்றில் உள்ள தடைகளைச் சுற்றிக்கொண்டு நிலவழியேச் செல்வது அல்லது இரு நீர்நிலைகளுக்கு இடையிலுள்ள நிலவழியே நீர்வழியுந்துகள் அல்லது சரக்கை எடுத்துச் செல்லுதலாகும். இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் நிலப்பகுதி நீர்வழியிடை நிலவழி எனப்படுகின்றது.



புதிய பிரான்சுக்கும் பிரான்சிய லூயிசியானாவிற்கும் வந்த பிரான்சிய தேடவியலாளர்கள் பல அருவிகளையும் விரைந்து சுழித்துச் செல்லும் ஆறுகளையும் எதிர்கொண்டனர். தொல்குடி அமெரிக்கர்கள் இத்தகையத் தடங்கலான இடங்களில் நிலவழிகள் ஊடாக தங்கள் படகுகளை தூக்கிச் சென்றனர்.
காலம் செல்லச்செல்ல, முக்கியமான நீர்வழியிடை நிலவழிகளில் கால்வாய்கள் வெட்டப்பட்டு வழியேற்படுத்தப்பட்டன. இந்த நிலவழியில் செல்ல தொடருந்து அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன. பொதுவாக தொடக்கநிலையில் நீர்வழியுந்துகளும் சரக்குகளும் தோளில் தூக்கிச் செல்லப்பட்டன; இதற்கு பலமுறை பயணிக்க வேண்டியிருந்தது. சிறு படகுகளைத் திருப்பிப் போட்டு தோளில் எடுத்துச் செல்ல வாகாக நடுப்பகுதி நுகத்தடி போல வடிவமைக்கப்பட்டன. சரக்குகளை எடுத்துச் செல்ல தலையிலிருந்து தொங்கிய கயிறுகளில் (தலைத்தொங்கி) இணைத்து எடுத்துச் சென்றனர்.
நீர்வழியிடை நிலவழிகள் பல கிலோமீட்டர்கள் தொலைவிற்கும் இருக்கலாம்; வட அமெரிக்காவிலுள்ள 19-கிலோமீட்டர் (12 mi) தொலைவுள்ள மெத்யே நீரிடை நிலவழியும் 8.5-மைல் (13.7 km) தொலைவுள்ள கிராண்டு நீரிடை நிலவழியும் எடுத்துக் காட்டுகளாகும். சில ஒரேதளத்தில் இருக்கலாம்; செட்லாந்திலுள்ள மாவிசு கிரைண்டு இத்தகையதாகும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads