நீர் முடிச்சு (Water knot) என்பது, தட்டையான நாடாக்களின் இரு முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சாகும். இதை, நாடா முடிச்சு (tape knot), புல் முடிச்சு (grass knot), ஊடுதொடர் நுனிமுடிச்சு (overhand follow-through) போன்ற வேறு பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. மலையேறுதலில் தாங்கு கயிறுகளை உருவாக்கும்போது இதனைப் பயன்படுத்துவர்.
முடிதல்

முதலில் ஒரு நாடாவின் முனையில் நுனி முடிச்சு ஒன்று போடப்படும். பின்னர் அடுத்த நாடாவின் முனையை எதிர்த் திசையில் இருந்து முடிச்சினுள் செலுத்தி முதல் நாடாவை தொடர்ந்து செல்லவேண்டும்.
முனைகள் 3 அங்குலமாவது நீண்டிருக்குமாறு விட்டு முழு உடல் நிறையையும் பயன்படுத்தி முடிச்சை இறுக்கிக் கொள்ளவேண்டும். மீண்டும் வழுக்கிக்கொண்டு வெளியில் வராமல் இருக்க, முனைகளை ஒட்டு நாடாக்களினால் அருகில் உள்ள நிலைப்பகுதியோடு ஒட்டிவிடலாம் அல்லது தைத்து விடலாம்.[1]
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.