நுகர்வோர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் கொள்வனவு செய்து பயன்படுத்துபவர் நுகர்வோர் (consumer) ஆவார். உற்பத்தியாளர் அல்லது மீள் விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் அல்லர். ஒவ்வோர் நாட்ட நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகின்றன.

இந்தியாவில்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் படி, பகுதி 2(1) (d) பிரிவின்படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள்.

  • காசு கொடுத்து பொருள் வாங்குகிறவர், நுகர்வோர்.
  • காசு கொடுத்து சேவையை அனுபவிக்கிறவர், நுகர்வோர்.
  • பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிருந்தால், பொருளை ஆள்பவர், நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தை தான் நுகர்வோர்.
  • காசு கொடுத்து சேவையை வாங்காவிடினும், காசு கொடுத்தது எவராக இருந்தாலும், சேவையை அனுபவிப்பவர் நுகர்வோர். உதாரணமாக, மகன், மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக தந்தை பணம் கொடுத்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்ற மகன்,மகள் இருவரும் தான் நுகர்வோர்கள். சுருங்கச்சொன்னால், பொருள், சேவை இரண்டிற்கும் காசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
Remove ads

இவற்றையும் பாருங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads