நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) என்பது இந்திய அரசின் ஒரு அமைச்சகமாகும். இந்த அமைச்சகத்தை அமைச்சர் பியூஷ் கோயல் நிர்வகிக்கிறார்.[1] இந்த அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை மற்றும் நுகர்வோர் நலன் துறை ஆகிய இருப்பிரிவுகள் உள்ளன.
Remove ads
உணவு மற்றும் பொது விநியோகத் துறை
- உணவு தானியங்களை வாங்குவதும், பாதுகாப்பதும், கொண்டு செல்வதும், விநியோகிப்பதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.
- விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி, கோதுமை, தானியங்கள் போன்ற உணவுப்பொருட்களின் குறைந்த பட்ச விலையை நிர்ணயித்து நாடு முழுவதும் சரியான விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும்[2]
- அரிசி, கோதுமை, முக்கிய தானியங்களை கொள்முதல் செய்து தனது கிடங்குகளில் (Godown) சேமித்து உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும். சேமிக்கப்பட்டவைகளை உரிய தொழிற்நுட்பத்துடன் பாதுகாக்கும்.
- பொது விநியோக முறையை அமல்படுத்தி மக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும்.
இதன் கீழுள்ள நிறுவனங்கள்
- இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India)
- மத்திய சேமிப்புக் கழகம் (Central Warehousing Corporation)
Remove ads
நுகர்வோர் நலன் துறை
நுகர்வோர் கூட்டுறவு, விலை கண்காணிப்பு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம்
இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். பயனர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு, ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த இந்திய அரசு முடிவு செய்ததுள்ளது. இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை பெற முடியும் . “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை 15 சனவரி 2020 முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செய்துள்ளது.. முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளது. [3][4]
Remove ads
இவற்றையும் பார்க் க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads