நுண்புழை நுழைவு

From Wikipedia, the free encyclopedia

நுண்புழை நுழைவு
Remove ads

நுண்புழைக் குழாயில் நீர்மம் நுழைவதை நுண்புழை நுழைவு (Capillary action, capillarity, capillary motion, அல்லது wicking) என்கிறோம்.[1][2][3]

Thumb
நுண்புழை நுழைவு

நுண்புழை இயக்கம்

மெல்லிய, மிகக்குறுகிய குறுக்களவு மட்டுமே உள்ள ஒரு குழாயை நீர் உள்ள பாத்திரத்தில் செருகினால் பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக அந்தக் குழாயில் ஏறும்.[4] அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும். மெல்லியதாக இருக்கும்போதுதான் இப்படி [நீர்], ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும். இத்தகைய மிக நுண்ணிய குறுக்களவு கொண்ட குழாய்களே நுண்புழைக் குழாய்கள் எனப்படுகின்றன.

Remove ads

விளக்கம்

பரப்பு இழுவிசையெனும் பண்பானது, நுண்புழை நுழைவு நிகழ்வை ஏற்படுத்துகிறது. நுண்புழைக் குழாயை நீரில் அமிழ்த்தும்போது நீரானது குழாயினுள் மேல்நோக்கி ஏறுகிறது. குழாயில் நீரின் மட்டம், வெளியில் உள்ள மட்டத்தைவிட அதிகமாக இருக்கும் (நுண்புழை ஏற்றம்). நுண்புழைக் குழாயை பாதரசத்தில் அமிழ்த்தினால், பாதரசமும் குழாயினுள் மேல்நோக்கி ஏறும். ஆனால், குழாயில் பாதரசத்தின் மட்டம், வெளியிலுள்ள மட்டத்தை விடக் குறைவாக இருக்கும் (நுண்புழை இறக்கம்).

Remove ads

தாவரங்களில் நுண்புழை இயக்கம்

தாவரங்கள் நீர் கிடைக்கும் இடம் நோக்கி தங்கள் வேர்களைக் கொண்டுசெல்லும். வேர் என்பது நீரை உறிஞ்சிக்கொள்கிறது என்ற கருத்து தவறானதாகும்.நீர் என்பதுதான் வேர் மூலமாக தன்னை மேல்நோக்கிக் கொண்டுசெல்கிறது. தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த குழாயின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads