நுவார்க்

From Wikipedia, the free encyclopedia

நுவார்க்
Remove ads

நியூவர்க் அல்லது நுவார்க் (Newark) (/ˈn.ərk/[4] அல்லது உள்ளூரில் /nʊərk/[5]) என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். நாட்டின் முதன்மையான வான், கடல் மற்றும் இருப்புப்பாதை சந்திப்பாக விளங்கும் இந்த நகரத்தின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி, 277,140 ஆகும். நாட்டின் மிகவும் கூடுதலான மக்கள் குடியிருக்கும் நகரங்களில் 67வது இடத்தில் உள்ளது.[6]

விரைவான உண்மைகள் நுவார்க் நகரம், நாடு ...

நியூ செர்சி மாநிலத்தின் நுழைவாயிற் பகுதி என அறியப்படும் பகுதியின் மையமாகவுள்ள நுவார்க் நியூ யார்க் பெருநகரப் பகுதியில் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். இது மன்காட்டனுக்கு மேற்கில் ஏறத்தாழ 8 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நுவார்க்-எலிசபெத் கடல்வழி முனையத் துறைமுகம் நியூசெர்சி மாநிலத்தின் முதன்மை சரக்குப்பெட்டி போக்குவரத்து மையமாக விளங்குவதுடன் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நகராட்சி ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் வானூர்தி நிலையமாகும். நாட்டின் போக்குவரத்து மிக்க வானூர்திநிலையங்களில் ஒன்றாக உள்ளது.[7][8][9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads