நூரானியா ஹசன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நூரானியா ஹசன் (இயற்பெயர்: பௌசுல் ஹசன், 1964 - ஏப்ரல் 19, 2012) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளரும் ஆவார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

பெளசுல் ஹஸன் 1964 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டம், மாவனெல்லை, உயன்வத்தையில் பிறந்தார். அங்குள்ள நூராணிய்யா மகா வித்தியாலயம், மாவனல்லை சாகிரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் கலைப்பட்டதாரி.

ஊடகத்துறையில்

மாவனெல்லைக்கான தினகரன் பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றிய இவர், பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து தினகரன் ஆசிரியர் பீட ஒப்புநோக்கு பிரிவில் பணியாற்றினார். தினகரன் பத்திரிகையில் விளையாட்டுத்துறை பகுதியில் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார். ‘நூரானியா ஹஸன்’ என்ற பெயரில் கட்டுரைகள் எழுதியுள்ளதுடன் வானொலியிலும் அறிமுகமானார். பின்னர் முகாமைத்துவ உதவியாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரிவில் இணைந்து கொண்டார்.

Remove ads

வானொலி ஒலிபரப்பாளராக

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, இலங்கை வானொலி தென்றல், இலங்கை வானொலி மலையக சேவை ஆகியவற்றின் பணிப்பாளராக பணியாற்றிய இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளராக பதவி வகித்து வந்தார். வானொலியில் துடுப்பாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார்.

இறப்பு

நூரானியா ஹசன் 2012 ஏப்ரல் 19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் இலங்கை வானொலி ஒழுங்கு செய்திருந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற போது அநுராதபுரம் அருகில் வாகன விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads