நெஞ்சு வலி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெஞ்சு வலி என்பது பலதரப்பட்ட நோய்களில் தோன்றக்கூடிய ஒரு அறிகுறி ஆகும், தனி ஒரு நோய் அன்று. நெஞ்சு வலி ஏற்பட இதய நோய் உட்பட பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில அவசரநிலை காரணங்களும் அடங்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், உயிர் கொல்லி நோய்களை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதே நேரம் சாதாரண நோய்களுக்கும் அதிக கவனம் அளிப்பதன் மூலம் பணமும் நேரமும் விரயமாகுமே அன்றி பயன் ஏற்படாது.

Remove ads

நெஞ்சு வலி ஏற்படக் காரணங்கள் - பரித்தறுதியீடு (Differential Diagnosis)

இதயகுழலிய காரணங்கள்

  1. தீவிர கரோனரி நோய்க்கூட்டறிகுறி அல்லது தீவிர இதயச்சுவர் சிரை நோய்க்கூட்டறிகுறி (Acute Coronary Syndrome)
    1. நிலையற்ற மார்பு நெரிப்பு (Angina Pectoris)
    2. இதயத்தசை இறப்பு (Myocardial Infarction)
  2. பெருந்தமனி கூறிடல் (Aortic Dissection)
  3. இதயச்சுற்றுப்பையழற்சி (Pericarditis) மற்றும் இதயநெறிப்பு (Cardiac Tamponade)
  4. இதய இலயமின்மை (Arrhythmias) - ஏட்ரியக்குறுநடுக்கம் (Atrial Fibrillation) மற்றும் பல வகையான இலயமின்மைகள்
  5. நிலைபெற்ற மார்பு நெரிப்பு (Stable Angina)

நுரையீரல் காரணங்கள்

  1. நுரையீரல் தமனித்தக்கயடைப்பு (Pulmonary Embolism)
  2. வளியியம் (அ) நிமோனியா
  3. நீர் மார்பகம் (Hydrothorax)
  4. வளி மார்பகம் (Pneumothorax)
  5. நுரையீரல் பையியம் (Pleurisy)

இரையகக்குடல் பாதை காரணங்கள்

  1. இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastro Oesophageal Reflux Disease)
  2. இடைப்படாச் சந்துப்பிதுக்கம் (Hiatus Hernia)
  3. தளராமை (Achalasia)
  4. வினைசார் சீரணக்கேடு (Functional Dyspepsia)

மார்பக மதில் (Chest Wall) காரணங்கள்

  1. காட்ட குறுத்தழற்சி (Costochondritis)[1]
  2. முள்ளிய நரம்புக் கோளாறு (Spinal Nerve Problem)
  3. நார்த்தசை வலி (Fibromyalgia)
  4. நரம்பு முளைவேர் நோய் (radiculopathy)
  5. இதயமுன்னப்பிடிப்பு நோய்க்கூட்டறிகுறி (Precordial catch syndrome)
  6. முலையின் நோய்கள் (Breast Conditions)
  7. அக்கி அம்மை (Herpes Zoster)
  8. காச நோய் (Tuberculosis)
  9. முதுமை மூட்டழற்சி (Osteoarthritis)
  10. en:Bornholm disease
  11. விலா எலும்பு முறிவு (Rib fracture)[2]

உளவியல் காரணங்கள்

  1. பீதி தாக்கம் (panic Attack)
  2. மனக்கலக்கம் (Anxiety)
  3. ஏக்க நோய் (Depression)
  4. நாய்மைக்கலக்கம் (Hypochondria)

இதர காரணங்கள்

  1. அதிவளியோட்ட நோய்க்கூட்டறிகுறி (Hyperventilation syndrome)
  2. டா காஸ்டா நோய்க்கூட்டறிகுறி)
  3. போர்ன்ஹோல்ம் நோய் (bornholm's disease)
  4. கார்பன் மோனாக்ஸைடு நஞ்சாதல் (CO Poisoning)
  5. சதையணையியம் (அ) சார்க்கோய்டோசிசு (Sarcoidosis)
  6. ஈய நச்சுமை
  7. மேல் உதர வலி (High Abdominal Pain)
Remove ads

மார்பக நெரிப்பு மற்றும் இதயத்தசையிரத்த நலிவு :

  • இதயத்தில் உள்ள முடியுரு தமனிகளின் விட்டம் சுருங்குவதால் (பெரும்பாலும் கொழுப்பு படிவதால்) ஏற்படும்

நெஞ்சுவலி "மார்பக நெரிப்பு" எனப்படுகின்றது. இதயத்தின் வழியாகவே உடலில் உள்ள அனைத்து இரத்தமும் பாய்ந்தாலும் இதயத்தின் தேவைக்கு அதனை நேரடியாக நுகர முடியாது. முடியுருத் தமனியின் வழியாக இதயமானது தனக்குத் தேவையான இரத்தத்தை பெற்றுக்கொள்கிறது. கரோனரி தமனியின் விட்டம் சுருங்கும்பொழுது, இதயத்தின் இரத்தவோட்டம் குறைகிறது. இதனால் இதயத் தசையில் இரத்த நலிவு ஏற்படுகிறது. இதனை பொதுவாக மாரடைப்பு என்று அழைப்பர்.

இடர்வரக் காரணக்கூறுகள்

  • மூத்த வயது மற்றும் ஆண் பால்
  • பரம்பரை
  • புகைப்பிடித்தல்
  • உயர் குருதி அழுத்தம் (Hypertension)
  • அதிககொலஸ்டிராலிரத்தம் (Hypercholesterolaemia) - கொழுப்புச் சத்து மிகுந்த உணவு உட்கொள்ளுதல்
  • நீரிழிவு (சர்க்கரை நோய்)
  • உடல் பருமன்
  • மது அருந்துதல்
  • வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆக்சியேற்றிப்பகைச் (Antioxidant) சத்துக்குறைவு
  • தனிமனிதர் இயல்புகள் (Personality) - ஆய்விகளால் தெளிவுற வரையறுக்கப்படவில்லை

அறிகுறிகள்

  • நிலைபெற்ற மார்பு நெறிப்பு
  1. பொதுவாக இடது பக்க (அ) நெஞ்செலும்புப் பிற்படு மார்பு வலி - இடது கையால் மார்பைப் பிடித்துக் கொள்வர். வலியானது 5-10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும். ஓய்வு எடுப்பதன் மூலமோ அல்லது கிளிசரைல் டிரை நைட்டிரேட்டு (GTN) மாத்திரை நாவின் அடியில் வைத்துக்கொள்வதன் மூலமோ வலி நிவாரணம் பெறுவர்.
  2. மூச்சுத்திணறல் (Dyspnoea)
  3. பயந்திருப்பார், அதிகம் வியர்த்திருக்கும்.
  • நிலையில்லா மார்பு நெறிப்பு - எப்பொழுது வேண்டுமானாலும் இதயத்தசையிரத்த நலிவு ஏற்படுத்தும்.
  1. நெஞ்சு வலியானது 10 நிமிடங்களுக்கு மிகுதியாகவும் அரை மணிக்குள்ளும் இருக்கும் மற்றும் GTN மூலம் உடனடி நிவாரணம் கிடைக்காது.
  2. இது ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும். உடனடி மருத்துவ கவனம் தேவைப்படும்.
  • இதயத்தசையிரத்த நலிவு
  1. நெஞ்சு வலி 30 நிமிடங்களுக்கும் மிகுதியாக இருக்கும்
  2. இதயமின் வரைவி (ECG) மாற்றங்கள்
  3. Creatinine Kinase (CK)-MB நொதியின் இரத்த அளவு அதிகரிக்கும்
  4. உமட்டல், வாந்தி
  5. மூச்சுத்திணறல்

முதலுதவியாளர் செய்யவேண்டியவை

  • பயத்தைத் தெளிவிக்கவும்.
  • மருந்து பாவிப்பரா எனக் கேட்டறிந்து அதைக் கொண்டுவரவும்.
  • GTN அல்லது ஆஸ்பிரின் (இலங்கை வழக்கு: அஸ்பிரின்) மாத்திரியை அரைத்துத் தூளாக்கி நாவின் கீழ் வைக்கலாம்.

இதயத்தசையிரத்த நலிவு (Myocardial Infarction) - மருத்துவ சிகிழ்ச்சை

  • விபத்துச்சேர்வையூர்தியில் செல்லும் பொழுதோ அல்லது மருத்துவமனை அடைந்த உடனோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, இதயமின் வரைவி இயந்திரத்தை பொருத்தி, சிரையுள் நுழைவு (சி.உ) (intravenous access) பெறவேண்டும்.
  • வலியகற்றி - மார்ஃபின் (Morphine) போன்ற வலியகற்றி கொடுக்கப்படவேண்டும்.
  • ஸ்டெப்ட்ரோகைனேசு (Streptokinase) 1.5MU ஐ 100 மிலி உப்புநீரில் (Saline infusion) 1 மணி நேரத்தில் சிரையுள் மெதுவாக செலுத்தி கரோனரித் தமனி உறைவு முறிவு (Thrombolysis) ஏற்படுத்த வேண்டும்.
  • ஆல்டெப்லேஸ் (Alteplase), டினக்டெப்லேஸ் (Tenecteplase), ரிடெப்லேஸ் (Reteplase) போன்ற உறைவு முறிவியையும் பயன்படுத்தலாம்.
  • ஸ்டென்ட் (stent) எனப்படும் தமனிக்குறுக்கம் விரிக்கும் இயந்திரத்தை முதல் 6-12 மணி நேரத்திற்குள் பொருத்தலாம்.
  • தமனி மறுகுறிக்கந்தவிர்த்தல் -
    • பிளேட்லெட் தடை (Antiplatelets) - ஆஸ்பிரின் 75-300 மிகி தினம் ஒருமுறை.
    • உறைவெதிர்ப்பி (Anticoagulant) - சருமத்தடி (Subcutaneous) (ச.அ) ஹெபாரின் 12,500 U தினம் இருமுறை
  • துணைமருந்து -
    • β-தடை (β-blocker)
    • நாவடி GTN 300-500 μg
Remove ads

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads