நெடுங்கோட்டுச் சட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெடுங்கோட்டுச் சட்டம் (Longitude Act) என்பது, அரசி ஆனின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில், சூலை 1714ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இது நெட்டுங்கோட்டுச் சபை ஒன்றை நிறுவ வழி சமைத்ததுடன் கப்பலின் நெடுங்கோட்டைத் துல்லியமாகக் கணிக்க உதவும் எளிமையான நடைமுறைச் சாத்தியமான முறையொன்றைக் கண்டுபிடிக்கும் எவருக்கும் பணப்பரிசு வழங்குவதற்கும் வழிவகுத்தது. 1714ன் சட்டத்தைத் தொடர்ந்து இதற்கான பல சட்டத்திருத்தங்களும் சில சமயங்களில் இதற்கு மாற்றீடாகப் புதிய சட்டங்களும் உருவாக்கப்பட்டன.[1]
Remove ads
பின்னணி
கடல்கடந்த பயணங்களின் முக்கியத்துவம் அதிகரித்துச் சென்றபோது, துல்லியமானதும், நம்பத் தகுந்ததுமான கப்பல் செலுத்தும் முறைகளின் முக்கியத்துவமும் அதிகரித்துச் சென்றது. அறிவியலாளர்களும், கப்பற்றுறையினரும் நெடுங்கோட்டைத் துல்லியமாக அளக்கும் முயற்சியில் நீண்டகாலமாகவே ஈடுபட்டிருந்தனர். அகலக்கோட்டைத் தீர்மானிப்பது ஒப்பீட்டளவில் இலகுவானது. ஆனால் நெடுங்கோட்டை அறிவதற்குப் பயன்பட்ட முறைகள் நீண்ட கடற்பயணங்களுக்குக் கரையைக் கண்ணில் காணும்வரை துல்லியமானவை அல்ல. சில வேளைகளில், ஏறத்தாழ 2,000[2] படையினரைப் பலிகொண்ட 1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வு போல பேரழிவையும் ஏற்படுத்துவது உண்டு. இந்த நிகழ்வு நெடுங்கோட்டை அளக்கும் பிரச்சினையை மீண்டும் தீவிர கவனத்துக்குக் கொண்டுவந்தது. மே 1714ல் இப்பிரச்சினைக்கான உகந்த தீர்வை வேண்டி வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாளிகையில் கொடுக்கப்பட்ட வணிகர்களதும், கடலோடிகளதும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, யூலை 1714ல் நெடுங்கோட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads