நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
Remove ads

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ளது.[2]

மூலவர்

அழகிய இராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களைக் கொண்டு அமைந்துள்ளார். சிறந்த பிரார்த்தனைத் தலம் என்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது.[2]

செடில் உற்சவம்

ஒவ்வோர் ஆண்டும் இங்கு நடைபெறுகின்ற செடில் உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] அவ்விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டுகின்றவர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறியபின்னர் நேர்த்திக்கடனை நிறைவேற்றும்பொருட்டு தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்கவைக்கின்றனர். ஏற்றம் போல அமைந்துள்ள செடிலில் குழந்தைகளைத் தாங்கிய படியானது பூசாரியால் சக்கரம் போல சுழற்றப்படுவதே நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.[2]

பராமரிப்பு

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads