நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) (नेपाल कम्युनिस्ट पार्टी (एमाले)) நேபாள நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் (அரசியல்) கட்சி ஆகும். அக்கட்சி 1990-ஆம் ஆண்டு நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்-இலெனினியம்), நேபாள பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்) ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைத்துத் தொடங்கப்பட்டது.இதனுடைய முதல் கூட்டம் நேபாளம், மொராங், இதகாராவில் இரதுவாமை நகராட்சியில் முந்தையப் பொதுச் செயலாளரும் மக்கள் ஏற்புடைய தலைவருமாகிய மதன் பந்தாரி வீட்டில் நடந்தது. இந்தக் கட்சி நான்கு தடவை அரசின் தலையேற்றது; முதலில், மன்மோகன் அதிகாரி தலைமையில் 1994 முதல் 1995 வரையிலும் அடுத்து மாதவ் குமார் நேபால் தலைமையில் 2009 முதல் 2011 வரையிலும் 2011 இல் சாலா நாத் கனால் தலைமையிலும் அதற்கடுத்து கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையில் 2015 முதல் 2016 வரையிலும் அரசுத் தலை ஏற்றது. இந்தக் கட்சி ஐந்து தடவை மற்ர கட்சிகளோடு கூட்டக அரசில் பங்கு வகித்துள்ளது. இது முதலில் 1997 இல் [[உலோகேந்திர பகதூர் சந்த் தலைமையிலும் அடுத்து கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் 1998 முதல் 1999 வரையிலும் பின்னர் புழ்சுபா கமல் தாகல் தலைமையில் 2008 முதல் 2009 வரையிலும் அதற்கடுத்து பாபுராம் பத்தாரை தலைமையில் 2011 முதல் 2013 வரையிலும் கடைசியாக 2014 முதல் 2015 வரையில் சுழ்சி கொய்ராலா தலைமையிலும் அர்சில் பங்கேற்றது.[6]

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக மாதவ் குமார் நேபால் இருந்தார். இக்கட்சியின் தலைவராக 2014 சூலை முதல் கட்க பிரசாத் சர்மா ஒளி உள்ளார்.
இந்தக் கட்சி "புத்தாபார்" என்ற இதழை வெளியிடுகிறது.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள இளைஞர் கழகம் (நே இ க) ஆகும்.
1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2734568 வாக்குகளையும் (31.61%) 71 இடங்களையும் பெற்றது.
Remove ads
வரலாறு
நிறுவல், 1991–1993
நேபாள ஒன்றிய இடது முன்னணி ( 1990), 1990 இல் ஊராட்சி அமைப்பை எதிர்த்து பலகட்சி மக்களாட்சியை மீட்க அமைக்கப்பட்டது. இது நேபாளப் பேராயக் கட்சியுடனும் அரசர் பிரேந்திராவுடனும் இணைந்து 1990 நவம்பரில் ஓர் அரசியல் கூட்டியக்கத்தினை நடத்தியது. இந்த மக்கள் பெருங்கூட்டியக்கம் இறுதியில் வெற்றி கண்டது. பின்னர், ஒன்றிய இடது முன்னணியின் இரு உறுப்புகளாகிய நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்) (1986–91), நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) ஆகியவை 1991 ஜனவரி 6 இல் ஒன்றிணைந்து நேபாள்ப் பொதுவுடைமைக் கட்சி (ஒன்றிய மார்க்சியம்-லெனினியம்) கட்சியை 1991 தேர்தலுக்கு முன் உருவாக்கின. பிறகு, நேபாள இடது முன்னணி (1990) செயல்படவில்லை.[7]
முதல் அரசு, 1994–1997
கட்சிப் பிளவு, 1998–1999
அரசர் கயனேந்திராவின் நேரடி ஆட்சி, 2002–2006
அரசியலமைப்பு மன்றம், 2008–2015
அண்மை மாற்றங்கள், 2015 முதல் அண்மை வரை
Remove ads
கருத்தியல்
மதன் பந்தாரி சம கால பன்னாட்டு வரலாற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேசிய வருக்கப் போராட்டம் எனும் கோட்பாட்டை முன்மொழிந்தார். இன்றுவரை இக்கோட்பாடே நேபாளப் புரட்சியின் முதன்மை தலைமைதாங்கும் நெறிமுறையாக உள்ளது.
இன்றைய உலகமயமாகிய நிலைமைகளில் அரசியல் பொருளியல் அதிகாரத்தைப் பெறாமல் நேபாள மக்கள் வெற்றிகாண முடியது என்பது மதன் பந்தாரியின் கண்ணோட்டம் ஆகும். தேர்தலில் நின்று மக்கள் வாக்குகளைப் பெற்றே, மாறாக ஆயுதமேந்திப் புரட்சி செய்தல்ல, வெற்றிகண்டு ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே நம்முன் உள்ள ஒரே வழி எனக் கருதினார். இதை அனைத்து மக்களும் உணரவைத்து பொதுவுடைமைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கச் செய்ய வேண்டும். பொதுவுடைமைக் கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் செயல்முனைவாளரோடு ஒருங்கிணைந்து மக்கள் ஆதரவைத் திரட்டவேண்டும். மக்கள் வாக்கின்றி நேபாள அரசு உண்மையான மக்களாட்சியை வழங்க முடியாது.
Remove ads
தலைமை

நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) தலைவர்கள்
- மன்மோகன் அதிகாரி, 1991-1999
- சாலா நாத் கனால், 2009-2014
- கட்க பிரசாத் சர்மா ஒளி, 2014-அண்மை
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) பொதுச்செயலாளர்கள்
- மதன் பந்தாரி, 1993
- மாதவ் குமார் நேபால், 1993-2008
- சாலா நாத் கனால், 2008-2009
- ஈசுவர் போகரல், 2009 - அண்மை
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) முதன்மை அமைச்சர்கள்
உடன் இணைந்த அமைப்புகள்
- நேபாளத் தொழிற்சங்கங்களின் பொதுக் கூட்டமைப்பு
- நேபாள இளைஞர் கழகம்
- அனைத்து நேபாளத் தேசிய தற்சார்பு மாணவர் ஒன்றியம்
- அனைத்து நேபாள மகளிர் கழகம்
- அனைத்து நேபாள உழவர் (விவசாயிகள்) கழகம்
- அனைத்திந்திய நேபாளத் தற்சார்பு மாணவர் ஒன்றியம்
- தேசிய ஆசிரியர் கழகம்
- தேசிய மக்கள் பண்பாட்டுப் பேரவை
- நேபாள மாற்றுத்திறனர் தேசிய மக்களாட்சி இயக்கம்
தேர்தல் முடிவுகள்
Remove ads
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads