நேரிலி ஒளியியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நேரிலி ஒளியியல் (nonlinear optics) என்பது நேரிலி ஊடகங்களில் ஒளி பாய்வதினால் ஊடகத்தின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் ஒளியில் ஏற்படும் விளைவுகளையும் குறிக்கும். இவ்வாறு ஒளிப்பாய்ச்சலினால் ஊடகத்தின் பண்புகளில் மாற்றம் நிகழுதல், கூடுதல் ஒருக்கம் (coherence) கொண்ட லேசர் கதிர்களின் பாய்ச்சலின்போது மட்டுமே ஏற்படுகிறது. ஏனெனில், பொதுவாக ஒளிக்கதிர்களின் மின்காந்தப் புலம் ஊடகத்திலுள்ள அணுக்களைப் பிணைக்கும் அணுப்புலத்தைக் காட்டிலும் வலு குன்றியதாக இருக்கும். இதன் காரணமாக, ஒளி பாய்வதால் ஊடகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு மாறாக ஊடகத்தின் பண்புகளினால் ஒளியின் பாய்ச்சலில் மாற்றம் ஏற்படுகிறது.

Remove ads

நேரிலி ஒளி விளைவுகள்

மிகுதியான மின்காந்தப் புலம் கொண்ட லேசர் கதிர்கள் பாயும்போது ஒரு நேரிலி ஊடகத்திலுள்ள அணுக்களின் இலத்திரன்கள் அதிர்வுகளுக்குள்ளாகின்றன. இந்த அதிர்வுகள் அலைகள் போன்று நிகழ்வன. இவை ஒன்றோடு ஒன்று மோதியும் கொள்கின்றன. இதனால் அவ்வூடகத்தின் பண்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்களினால், பாயும் ஒளிக்கதிர்களில் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.

  • அதிர்வெண் இரட்டிப்பு - செல்லும் ஒளியின் அதிர்வெண்கள் இரட்டிக்கப்படுதல். எடுத்துக்காட்டாக, 1064 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர் 532 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட பச்சை நிறக் கதிராக மாறும்.
  • அதிர்வெண் சேர்க்கை - (எ-கா) சிவப்பு நிறக் கதிரும் பச்சை நிறக்கதிரும் இணைந்து ஊதா நிறக் கதிர் உண்டாகுதல்.

இந்த நேரிலி ஒளிவிளைவுகளைப் பயன்படுத்தி காலத்தை மிகத்துல்லியமாக அளக்க முடியும் என்று நிறுவியதற்காக 2005-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு -காலஸ் மற்றும் ஹான்ஸ் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads