நேரு யுவ கேந்திரா சங்கதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேரு யுவ கேந்திரா (Nehru Yuva Kendra Sangathan)(பொருள்: நேரு இளைஞர் மையங்கள்) என்பது 1972ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட இளைஞர் நல மேம்பாட்டு அமைப்பாகும். ராஜீவ்காந்தி இதனை 1987-ல் நேரு யுவ கேந்திரா சங்கதன் (பொருள்: நேரு இளைஞர் மைய சங்கம்) என இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக மாற்றினார்.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான இளைஞர் மேம்பாட்டு அமைப்பாகும். இது தன்னார்வ, சுய உதவி மற்றும் சமூக பங்கேற்பு கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைக்கிறது.
Remove ads
நோக்கங்கள்
நேரு யுவ கேந்திரா சங்கதன் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: அவை: 1:- தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு வழிவகைகளை வழங்குதல், 2:- அவர்களின் ஆளுமை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்.[1]
முக்கியத்துவம்
நேரு யுவ கேந்திரா சங்கதன் இளைஞர் விவகார அமைச்சகத்தின் பல்வேறு இளைஞர் நலத் திட்டங்கள் மற்றும் பிற அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்புத் திட்டங்களையும் இளைஞர் மேம்பாட்டின் பல்வேறு வகைகளில் பணியாற்றி வருகிறது. நல்ல குடியுரிமை, சிந்தனை மற்றும் மதச்சார்பற்ற வழிகளில் நடந்துகொள்வது, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் உற்பத்தி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க உதவுவதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
Remove ads
பார்வை
- தன்னார்வ ஒருங்கிணைப்பு
- அரசியல் மற்றும் வளர்ச்சியின் அடிப்படை ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள்,
- திறன்-உருவாக்கம், உடல்நலம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் போன்ற இளைஞர்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கட்டமைத்தல்.
கட்டமைப்பு
தற்போதைய ஆளுமைக் குழுவின் அமைப்பு | ||
பெயர் | பதவி | பேரவை இயக்கக நிலை |
கிரண் ரிஜிஜு | மாண்புமிகு மாநில அமைச்சர் (தன்னாட்சி) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் | தலைவர் |
உஷா சர்மா, இ.ஆ.ப. | செயலாளர், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு | துணைத் தலைவர் |
பிரவேஷ் சாஹிப் சிங் | நாடாளுமன்ற உறுப்பினர் (தில்லி-மேற்கு தில்லி) | உறுப்பினர் |
நளின் குமார் கட்டீல் | நாடாளுமன்ற உறுப்பினர் (கர்நாடகா - தட்சிண கன்னடம்) | உறுப்பினர் |
ரூபா கங்குலி | நாடாளுமன்ற உறுப்பினர் (மேற்கு வங்கம் - பரிந்துரைக்கப்பட்டது) | உறுப்பினர் |
ரவி மிட்டல், இ.ஆ.ப. | செயலாளர், விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டு | உறுப்பினர் |
மனோஜ் சேத்தி | இணைச் செயலாளர் & நிதி ஆலோசகர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு | உறுப்பினர் |
சஞ்சீவ் சோப்ரா | இயக்குநர், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு | உறுப்பினர் |
அசித் சிங் | இணைச் செயலாளர், இளைஞர் விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை | உறுப்பினர் |
லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா | பொது இயக்குநர், என்.சி.சி | உறுப்பினர் |
பேராசிரியர் சிப்நாத் டெப் | இயக்குநர் -இராஜிவ் காந்தி இளையோர் மேம்பாட்டு நிறுவனம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு | உறுப்பினர் |
சவுரவ் குமார் ஷா, இ.கா.ப. | இயக்குநர் - தேசிய சேவை திட்டம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு | உறுப்பினர் |
எஸ். விஷ்ணு வர்தன் ரெட்டி | புகழ்பெற்ற நபர் (ஆந்திரப் பிரதேசம்) | துணைத் தலைவர் |
தினேஷ் பிரதாப் சிங் | புகழ்பெற்ற நபர் (உத்தரப் பிரதேசம்) | துணைத் தலைவர் |
பிரதீப்சிங் வகேலா | புகழ்பெற்ற நபர் (குஜராத்) | துணைத் தலைவர் |
மாதவி அகர்வால் | புகழ்பெற்ற நபர் | உறுப்பினர் |
சவுரவ் சிங் | எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற நபர் | உறுப்பினர் |
ராஜேந்திர பிரசாத் சைன் | புகழ்பெற்ற நபர் | உறுப்பினர் |
சவுரவ் குமார் ஷா, இ.கா.ப. | இயக்குநர், நேரு யுவ கேந்திரா சங்கதன் | உறுப்பினர் செயலாளர் |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads