நைஜீரிய தேசிய காற்பந்து அணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நைஜீரிய தேசிய கால்பந்து அணி (Nigeria national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் நைஜீரியா நாட்டின் சார்பில் பங்கேற்கும் தேசிய கால்பந்து அணியாகும். இவ்வணி, உன்னதப் பருந்துகள் என்றும், முன்னதாக பச்சைப் பருந்துகள் என்றும் அடைமொழியிட்டு அழைக்கப்பட்டது. நைஜீரிய நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான நைஜீரிய கால்பந்துச் சங்கம் இவ்வணியை நிர்வகிக்கிறது. ஏப்ரல் 1994 பிஃபா உலகத் தரவரிசையில் உலக அளவில் 5-வது தர எண் கொடுக்கப்பட்டிருந்தது; பிபா உலகத் தரவரிசையில் ஓர் ஆப்பிரிக்க அணியினால் பெறப்பட்ட அதிகபட்ச தரவரிசை இடம் இதுவேயாகும்.

விரைவான உண்மைகள் அடைபெயர், கூட்டமைப்பு ...

ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையின் தற்போதைய வாகையர், நைஜீரிய அணியினரே ஆவர். இக்கோப்பையை இவர்கள் 3 முறை வென்றிருக்கின்றனர். உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இரண்டுமுறை 16-அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கடந்த ஆறு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில், ஐந்துக்கு இவர்கள் தகுதி பெற்றிருக்கின்றனர்; முதல்முறையாக உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றது 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை. மேலும், 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்; ஒலிம்பிக் கால்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அணி இதுவேயாகும்.

Remove ads

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads