நைத்திரைடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேதியியலில்நைத்திரைடு (Nitride) அயன் என்பது N3- என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய ஓர் எதிரயன் ஆகும்.[1] இதில் நைதரசன் அணுவின் ஒட்சியேற்ற எண் -III ஆகும்.[2]

விரைவான உண்மைகள் பெயர்கள், பண்புகள் ...

நைத்திரைடு அயனைக் நீர்க்கரைசல் நிலையில் பெற முடிவதில்லை. இது மூல வலிமை மிகவும் கூடிய அயனாதலால், நீரிலிருந்து H+ அயனைப் பெற்று, நேர்மின்னியேற்றம் அடைந்து விடும்.[1]

Remove ads

எடுத்துக்காட்டுகள்

எசு-தொகுப்புத் தனிமங்களின் நைத்திரைடுகள்

கார மாழைகளின் நைத்திரைடுகளுள் இலித்தியம் நைத்திரைட்டை (Li3N) மட்டுமே இலித்தியத்தை நைதரசன் வளிமத்தில் எரிப்பதன் மூலம் பெறமுடியும்.[3] ஏனைய கார மாழைகளை இவ்வாறு எரித்து, அவற்றின் நைத்திரைடுகளைப் பெறமுடியாது.[4] ஆயினும், சோடியம் நைத்திரைடு, பொற்றாசியம் நைத்திரைடு ஆகியவற்றை ஆய்வுக்கூடத்தில் ஆக்கமுடியும்.[5][6] காரமண் மாழைகள் அனைத்தும் நைதரசன் வளிமத்தில் எரிக்கும்போது, அவற்றின் நைத்திரைடுகளைத் தரக்கூடியவை.[4] காரமண் மாழைகளின் நைத்திரைடுகள் M3N2 என்ற பொதுவடிவில் அமைந்திருக்கும்.[7]

பீ-தொகுப்புத் தனிமங்களின் நைத்திரைடுகள்

போரன் நைத்திரைடு வேறுபட்ட பல வடிவங்களில் காணப்படுகின்றது.[8] சிலிக்கன், பொசுபரசு ஆகிய தனிமங்களின் நைத்திரைடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.[9] அலுமினியம், காலியம், இந்தியம் ஆகிய மூலகங்களின் நைத்திரைடுகள் வைரம் போன்ற கட்டமைப்பை உடையவை.

Remove ads

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads