நைராத்மியை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நைராத்மியை ஒரு பெண் புத்தர் ஆவார். இவரை சூன்யத்தன்மையின் தேவி எனவும் புத்கல-நைராத்மியை எனவும் அழைப்பர். பௌத்த சித்தாந்தத்தின் படி ஒருவர் தான் தனித்து இருப்பதாக நினைப்பது மாயை, உண்மையில் அனைவரும் அனைத்துடனும் இணைந்துள்ளனர். இந்த தத்துவத்தின் உருவகமாகவே நைராத்மியை திகழ்கிறார்.

இவருடைய உடல் நீற நிலத்துடன் திகழ்கிறது. நீலம் என்பது எல்லையற்ற வானையும் அதைப்போன்ற இவருடைய உணர்வையும் குறிக்கிறது. விண்வெளியைப் போல இவர் தடையின்றி இந்த பிரபஞ்சத்தில் உலா வருகிறார். ஏனெனில் இவர் 'தான்' என்ற உணர்வை தாண்டிய நிலையில் உள்ளார். இவர் கண்கள் அறிவாற்றலால் மிளிர்கின்றன. மேலும், தன்னுடைய வாளை மேள்நோக்கி வைத்து இருப்பது, தீய சிந்தனைகளை எழுந்த உடனே அழிப்பதற்கு. தன்னுடைய பிச்சை பாத்திரத்தில் மாயைகளை எரித்து அதன் சுய உருவுக்கு திருப்புகிறார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads