நோயெதிர்ப்பியச் சிகிச்சை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நோயெதிர்ப்பியச் சிகிச்சை (Immunotherapy) என்பது நோயெதிர்ப்பிய செயற்பாடுகளைத் தூண்டி, மேம்படுத்தி அல்லது அடக்கி நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதாகும்[1]. நோயெதிர்ப்பிய செயற்பாடுகளைத் தூண்டும் (அ) பெருக்கும் வழிமுறைகளைக் கொண்ட நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறைகள் செயலூக்கப்பட்ட நோயெதிர்ப்பியச் சிகிச்சைகள் (activation immunotherapies) எனப்படுகின்றன. அதே சமயம், நோயெதிர்ப்பிய செயற்பாடுகளைக் குறைக்கும் (அ) அடக்கும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறைகள் ஒடுக்கப்பட்ட நோயெதிர்ப்பியச் சிகிச்சைகள் (suppression immunotherapies) எனப்படுகின்றன.

விரைவான உண்மைகள் நோயெதிர்ப்பியச் சிகிச்சை, MeSH ...
Remove ads

நோயெதிர்ப்புத் திறன் மாற்றிகள்

நோயெதிர்ப்பியச் சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் முனைப்பான பொருட்கள் நோயெதிர்ப்புத்திறன் மாற்றிகள் (Immunomodulators) என்றழைக்கப்படுகின்றன. இவை மீள்சேர்ப் புரதங்கள், செயற்கையான, இயற்கையானப் பொருட்கள் எனப் பலதரப்பட்டவையாகும். உதாரணங்களாக, சைட்டோகைன்களைக் கூறலாம்[2]. நச்சுயிரிப் பெருக்கத் தடுப்பிகள் (இண்டெர்ஃபெரான்), பாக்டீரியாக்களின் உயிரணுச்சவ்வுப் பகுதிகள்[3], சிறுமணிக்கலங்களை ஊக்குவிக்கும் காரணி (Granulocyte colony stimulating factor) போன்ற நோயெதிர்ப்புத்திறன் மாற்றிகள் நோயாளிகளில் உபயோகப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள மருந்துகளைக் காட்டிலும் குறைந்த அளவு பக்கப் பிரச்சனைகளைக் கொண்டுள்ளதாலும், நோய்த்தொற்றுகளினால் ஏற்படும் பிணிகளில் குறைந்த அளவே நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மையை (microbial resistance) உருவாக்குவதாலும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறைகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன[4].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads