நோயெதிர்ப்பியலாளர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோயெதிர்ப்பியலாளர்கள் (Immunologists) உயிரினங்களின் நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்து (மனித நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்தும்) ஆராயும் அறிவியலாளர்களாவர். இவர்கள், ஆய்வகங்களில் பணிபுரியும் முனைவர்கள், நோயெதிர்ப்பு அமைப்புப் பிறழ்வினைகளால் ஏற்படும் பிணிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆய்வு மற்றும் நோயாளிகளுக்குச் சிகிச்சை ஆகிய இரண்டையும் பணியாகக் கொண்ட மருத்துவ முனைவர்கள் எனப் பலவகைப்படுவர்.
ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நோயெதிர்ப்பியலாளர்கள் (Research Immunologists) நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் அதன் இயங்கு முறைகள் குறித்த உயிரிமருத்துவ ஆய்வினை மேற்கொள்ளுபவர்கள். மருத்துவ நோயெதிர்ப்பியலாளர்கள் (Medical Immunologists) நோயெதிர்ப்பு அமைப்பில் சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுடன் நேரடியாக பணிபுரிபவர்கள்[3]. அமெரிக்க நோயெதிர்ப்பியலாளர்கள் சங்கம் ஆண்டுதோறும் நோயெதிர்ப்பியலாளர்களுக்காக அறிமுக பயிற்சி வகுப்பு மற்றும் முன்னேறிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது[4].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads