நோயெதிர்ப்பியவேதியியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோயெதிர்ப்பியவேதியியல் (Immunochemistry) என்பது நோயெதிர்ப்பு அமைப்பின் அடிப்படையான மூலக்கூற்று இயங்குமுறைகளைக் குறித்து பயிலும் வேதியியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு எதிர்ப்பான்களின் பண்புகள், எதிர்ப்பிகள், எதிர்ப்பான்கள் - எதிர்ப்பிகளுக்கிடையேயான ஊடாடல்கள் குறித்து அறிந்து கொள்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது[1]. பல்வேறுவிதமான நோயெதிர்ப்பியவேதியியல் செய்முறைகள் உருவாக்கப்பட்டு, திருத்தப்பட்டு நச்சுயிரியல் (Virology) முதற்கொண்டு மூலக்கூற்றுப் பரிணாமம் (Molecular Evolution) வரை பலதரப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோயெதிர்ப்பியவேதியியலின் தொடக்க கால உதாரணமாக சிபிலிசு கண்டறியும் சோதனையைக்[2] கூறலாம்.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
