நோய்பாடியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோய்பாடியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 67 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாக நமக்குக் கிடைத்துள்ளது.
நோய்பாடியார் என்பது இந்தப் புலவரின் இயற்பெயராகத் தெரியவில்லை. காமநோய் பற்றிப் புதுமையாகப் பாடிய இவரது பாடல் இருந்திருக்க வேண்டும். 400 என்று வரையறைப்படுத்தித் தொகுக்கும்போது அதனை இடம்பறச் செய்யமுடியாத நிலை நேர்ந்திருக்க வேண்டும். இதனால் எட்டுத்தொகையைத் தொகுத்தவர் இவருக்கு நோய்பாடியார் என்னும் பெயரை இட்டிருக்க வேண்டும்.[1]
Remove ads
அகநானூறு 67 சொல்லும் செய்திகள்
மழை வாழ்த்து
பொருள் தேடச் செல்லும் தலைவன் பாலைநில வழியில் செல்கிறான். அங்கு மழை பெய்யவேண்டும் என்று தலைவி மழையை வாழ்த்திப் பாடுகிறாள். எனினும் மழை பெய்யவில்லை.
நிரையம் கொண்மார்
பாலை நிலத்தில் அம்பை வைத்துக்கொண்டு அதனை ஆள்மேல் எய்து வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்துவோர் நிரையம்(நரகம்) அடைவர்.
நடுகல்
இப்படிப்பட்ட நிரையம் கொள்பவரோடு போராடி வென்று உயிர் துறந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு இருந்தது. நடுகல்லில் போரில் வென்று உயிர் துறந்தவரின் பெயரும் அவரது பெருமையும் எழுதப்பட்டிருக்கும். நடுகல்லின்மீது மயிற்பீலி சூட்டுவர். வென்ற போராளியின் வேல் அங்கு நடப்பட்டிருக்கும். வேலுடன் அவனது கேடயப் பலகையும் மாட்டப்பட்டிருக்கும்.
மொழிபெயர் தேஎம்
தமிழ் அல்லாமல் பெயர்த்த வேறு மொழி பேசும் நாட்டுப் பகுதிக்கும் தமிழர் அக்காலத்தில் பொருள் தேடச் சென்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads