நௌசரோ
பாக்கித்தான் தொல்லியல் களம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நௌசரோ (Nausharo) பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அரப்பா காலத்திய தொல்லியல் களம் ஆகும்.

நௌசரோ தொல்லியல் மேட்டை 1985 மற்றும் 1996 இடைப்பட்ட காலங்களில் பிரான்சு தொல்லியல் அறிஞர்களால் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மெஹெர்கர் பண்பாட்டுத் தொல்லியல் களம் இதனருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
நௌசரோ அகழ்வாய்வுகள்
நௌசரோ தொல்லியல் களம் கிமு 3000 முதல் கிமு 1900 வரை மக்கள் குடியிருப்புகள் தொடர்ந்து இருந்தது. இத்தொல்லியல் களத்தின் அகழ்வாய்வில் மட்பாண்டத் தொழில் பட்டறைகள், சுட்ட மற்றும் சுடாத மட்பாண்ட சில்லுகள், மட்பாண்டம் செய்வதற்கான களிமண் குவியல், 12 தீக்கற்கள், பச்சை செற்கற்களை அறுக்கும் கூர்மையான கத்திகள், மட்பாண்டச் சக்கரம் மற்றும் செப்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1]
நௌசரோ தொல்லியல் களத்தின் கால வரிசை
- காலம் IA - கிமு 2900-2800
- காலம் IB - கிமு 2800-2700
- காலம் IC - கிமு 2700-2600
- காலம் ID - கிமு 2600-2550 (இடைநிலைக் காலம்)
- காலம் IIA - கிமு 2550-2300
- காலம் IIB - கிமு 2300-1900
- காலம் III - கிமு 1900-1800
இதனையும் காண்க
மேலும் படிக்க
Jarrige, Catherine; Une tête d'éléphant en terre cuite de Nausharo (Pakistan) [தொடர்பிழந்த இணைப்பு] [An elephant's head in terracotta:Nausharo (Pakistan)] (French).
மேற்கோள்கள்
வெள் இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
