ந. சஞ்சீவி

From Wikipedia, the free encyclopedia

ந. சஞ்சீவி
Remove ads

பேராசிரியர் ந. சஞ்சீவி (1927 - 1988) இன உணர்வாளர்; மொழிக் காப்பாளர்; சமுதாயச் சிந்தனையாளர்; அறிவியல் கோட்பாட்டாளர்;[1]

விரைவான உண்மைகள் பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி, பிறப்பு ...
Remove ads

பிறப்பு

பேராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி, 2.5.1927ஆம் நாள் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய மு. நடேசனார், கண்ணம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார்.

கல்வி

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் திருச்சியில் உள்ள பள்ளிகளிலேயே படித்து முடித்தார். பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1941-43ஆம் கல்வியாண்டுகளில் பயின்று இடைக்கலைப் (Intermediate) பட்டம் பெற்றார்.[2]

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1943-45 ஆம் கல்வியாண்டுகளில் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் (மு.வ) ஆகிய பேராசிரியர்களிடம் பயின்று சிறப்புத் தமிழில் இளங்கலைப் (Bachelor of Arts) பட்டமும் [3]

1947-50 ஆம் கல்வியாண்டுகளில் பயின்று கீழ்த்திசை மொழிகளில் சிறப்பு இளங்கலைப் பட்டமும் (Bachelor of Oriental Language - Honours) பெற்றார்.

பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் புறநானூற்று ஆராய்ச்சி என்னும் பொருளில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டமும் பேராசிரியர் மு.வ.வின் வழிகாட்டுதலில் சங்க நூல்களில் அடைவளம் என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1969ஆம் ஆண்டில் முனைவர் (Doctor of Philosophy) பட்டமும் பெற்றார்.[4]

இவைதவிர மானுடவியல், அரசியல், ஆட்சியியல் ஆகியவற்றில் நிறைசான்றிதழ்களும் (Diplomas) மொழியியல், இயற்கை வைத்தியம், செர்மன், பிரஞ்சு, உளவியல் ஆகியவற்றில் சான்றிதழ்களும் (Certificates) பெற்றார்.

Remove ads

பணி

1950 – 60 ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர்.
1960 – 65 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்விரிவுரையாளர்.
1965 -71 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இணைப் பேராசிரியர்.
1971- 76 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர்.
1976–80 ஆம் ஆண்டுகளில், இந்திராகாந்தியால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலை எதிர்த்ததால், பணி இடைநீக்கம்.
1980 – 87 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர்.

எழுதிய நூல்கள்

முதற்பதிப்பு ஆண்டுநூல்குறிப்பு
1954மானங்காத்த மருதுபாண்டியர்
1954சங்ககாலச் சான்றோர்கள்
1956மருதிருவர்
1956சிலப்பதிகார விருந்து
1956வேலூர்ப் புரட்சி
கவிஞர் தரும் காட்சிஇந்நூல் அச்சில் இருப்பதாக 1956ஆம் ஆண்டில் வெளிவந்த வேலூர் புரட்சி நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
1958வீரத்தலைவர் பூலித்தேவர்
1958இருபெருந் தலைவர்கள்
1959சிலம்புத்தேன்
1959உணர்வின் எல்லை
1959செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
இயலிசை நாடகம்இந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் நாடக வரலாறுஇந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
நாடகப் பேராசிரியர் நால்வர்இந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கைச் சிங்கங்கள்இந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
முதலில் முழங்கிய முரசுஇந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
வீரத் தமிழகத்தில் விடுதலை வேள்விஇந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளையர் கண்ட வீரத் தமிழகம்இந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
விடுதலை இயக்க வரலாறுஇந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளை ஆதிக்க வரலாரறுஇந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
போரும் வேரும்இந்நூலின் பெயர் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
19601806
1960கும்மந்தன் கான் சாகிபு
பதிற்றுப்பத்துள் மூன்றாம் பத்துஇந்நூலின் பெயர் 1960ஆம் ஆண்டில் வெளிவந்த கும்மந்தன் கான் சாகிபு நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
1970ஆராய்ச்சிக் கட்டுரைகள்
1973சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்
1974இலக்கிய இயல் அ, ஆ.
1977மங்கல மனைமாட்சி
கம்பன் – ஒரு கொம்பன்இந்நூலின் பெயர் 1977ஆம் ஆண்டில் வெளிவந்த மங்கல மனைமாட்சி நூலில் அச்சில் இருப்பதாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
கம்பன் நம்மவன்இந்நூலின் பெயர் 1977ஆம் ஆண்டில் வெளிவந்த மங்கல மனைமாட்சி நூலில் அச்சில் இருப்பதாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
வீடணன் – ஒரு திறனாய்வுஇந்நூலின் பெயர் 1977ஆம் ஆண்டில் வெளிவந்த மங்கல மனைமாட்சி நூலில் அச்சில் இருப்பதாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வியல் அரிச்சுவடிஇந்நூலின் பெயர் 1977ஆம் ஆண்டில் வெளிவந்த மங்கல மனைமாட்சி நூலில் அச்சில் இருப்பதாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
படிப்படியே தமிழ்ப் பண்பாடுஇந்நூலின் பெயர் 1977ஆம் ஆண்டில் வெளிவந்த மங்கல மனைமாட்சி நூலில் அச்சில் இருப்பதாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
கருத்துமலர்கள்இந்நூலின் பெயர் 1977ஆம் ஆண்டில் வெளிவந்த மங்கல மனைமாட்சி நூலில் அச்சில் இருப்பதாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
1989சீனம் தரும் சிந்தனைகள்
1989இலக்கியத் தலைவர் கலைஞர்
1995தமிழியல் கட்டுரைகள்
ந.சஞ்சீவியின் கட்டுரைக் களஞ்சியம்
பொதுமைசூடி
Remove ads

பதிப்பித்த நூல்கள்

முதற்பதிப்பு ஆண்டுநூல்
1973First All India Tirukkural Research Seminar Papers
1974பல்கலைப் பழந்தமிழ்
1975தெய்வத்தமிழ்
1979பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ்

மொழிபெயர்ப்பு

சேலம் பிசப்பு டாக்டர் கால்டுவெல் 1881ஆம் ஆண்டில் எழுதிய History of Tinnaveli என்னும் ஆங்கில நூலை ”தென்பாண்டித் திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு” என்னும் நூலை தம் மனைவியார் பேராசிரியர் கிருஷ்ணா சஞ்சீவியோடு இணைந்து 1977ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார்.

பெற்ற சிறப்புகள்

• செந்தமிழ் இலக்கியச் செம்மல், தருமபுர ஆதினம், 1970
• நூலறிபுலவர், குன்றக்குடி ஆதினம், 1973
• சிந்தனைச் செம்மல்

அரசியல் ஈடுபாடு

1942ஆம் ஆண்டில் திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது நடைபெற்ற இந்தியாவைவிட்டு வெளியேறுக! (வெள்ளையனே வெளியேறு) இயக்கத்தில் பங்கேற்றார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்களாட்சி சமுதாய உடைமை தமிழகக் குடியரசு (Democratic Socialistic Republic of Tamilnadu ) என்னும் நோக்கில் ம.பொ.சிவஞானம் நடத்திய தமிழரசுக் கழகத்தில் உறுப்பினராக அதனுடைய தொடக்க நாள் முதல் தன்னுடைய இறுதிநாள் வரை இருந்தார்.

Remove ads

மறைவு

22.8.1988ஆம் ஆண்டு சென்னையில் மரணமடைந்தார்

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads