ந. சுப்பு ரெட்டியார்
இந்தியத் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. சுப்பு ரெட்டியார் (ஆகத்து 27, 1916 - மே 1, 2006) தமிழறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும் ஆவார். இவர் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]
வாழ்க்கைக் குறிப்பு
ந. சுப்பு ரெட்டியார் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், பெரகம்பி என்ற ஊரில் எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். திருச்சி சூசையப்பர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[2]
இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் 1960-ல் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றினார்.[2]
Remove ads
பெற்ற விருதுகள்
- திரு. வி. க. விருது
- திருக்குறள் விருது
- டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது
- கலைமாமணி விருது
இயற்றியுள்ள நூல்கள்
- அகத்திணைக் கொள்கைகள்
- அண்ணல் அனுமன்
- அணுக்கரு பௌதிகம்
- அணுவின் ஆக்கம்
- அதிசய மின்னணு
- அம்புலிப் பயணம்
- அர்த்த பஞ்சகம்
- அறிவியல் தமிழ்
- அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
- அறிவியல் பயிற்றும் முறை
- அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு)
- அறிவியல் விருந்து
- அறிவுக்கு விருந்து
- ஆழ்வார்களின் ஆரா அமுது
- இராக்கெட்டுகள்
- இராமலிங்க அடிகள்
- இல்லற நெறி
- இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்
- இளைஞர் தொலைக்காட்சி
- இளைஞர் வானொலி
- என் அமெரிக்கப் பயணம்
- கண்ணன் பாட்டுத் திறன்
- கம்பனின் மக்கள் குரல்
- கல்வி உளவியல்
- கல்வி உளவியல் கோட்பாடுகள்
- கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
- கலியன்குரல்
- கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி – ஒரு மதிப்பீடு
- கவிஞன் உள்ளம்
- கவிதை பயிற்றும் முறை
- கவிமணியின் தமிழ்ப்பணி – ஒரு மதிப்பீடு
- காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்
- காலமும் கவிஞர்களும்
- குயில் பாட்டு – ஒரு மதிப்பீடு
- சடகோபன் செந்தமிழ்
- சி.ஆர்.ரெட்டி (மொழிபெயர்ப்பு)
- சைவ சமய விளக்கு
- சைவ சித்தாந்தம் – ஓர் அறிமுகம்
- சைவமும் தமிழும்
- சோழ நாட்டுத் திருப்பதிகள் – 1
- சோழ நாட்டுத் திருப்பதிகள் – 2
- ஞானசம்பந்தர்
- தந்தை பெரியார் சிந்தனைகள்
- தம்பிரான் தோழர்
- தமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை
- தமிழ் பயிற்றும் முறை
- தமிழ்க்கடல் இராய.சொ.
- தமிழில் அறிவியல் செல்வம்
- தமிழில் அறிவியல் – அன்றும் இன்றும்
- தாயுமானவர்
- திருக்குறள் தெளிவு – உரைநூல்
- திருவேங்கடமும் தமிழிலக்கியமும்
- தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
- தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
- தொலை உலகச் செலவு
- நமது உடல்
- நவவித சம்பந்தம்
- நாவுக்கரசர்
- நினைவுக் குமிழிகள் – பாகம்-1
- நினைவுக் குமிழிகள் – பாகம்-2
- நினைவுக் குமிழிகள் – பாகம்-3
- நினைவுக் குமிழிகள் – பாகம்-4
- நீங்காத நினைவுகள் – 1
- நீங்காத நினைவுகள் – 2
- பட்டினத்தடிகள்
- பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
- பரகாலன் பைந்தமிழ்
- பரணிப் பொழிவுகள்
- பல்சுவை விருந்து
- பாஞ்சாலி சபதம் – ஒரு நோக்கு
- பாட்டுத்திறன்
- பாண்டிநாட்டுத் திருப்பதிகள்
- பாண்டியன் பரிசு – ஒரு மதிப்பீடு
- பாரதீயம்
- பாவேந்தரின் பாட்டுத்திறன்
- புதுவை(மை)க் கவிஞர் பாரதியார் – ஒரு கண்ணோட்டம்
- மலரும் நினைவுகள்
- மலைநாட்டுத் திருப்பதிகள்
- மாணிக்கவாசகர்
- மானிட உடல்
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
- முத்தொள்ளாயிர விளக்கம்
- மூவர் தேவாரம் – புதிய பார்வை
- வடநாட்டுத் திருப்பதிகள்
- வடவேங்கடமும் திருவேங்கடமும்
- வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்
- வாய்மொழியும் வாசகமும்
- வாழும் கவிஞர்கள்
- வாழையடி வாழை
- விட்டுசித்தன் விரித்த தமிழ்
- வேமனர் (மொழிபெயர்ப்பு)
- வைணமும் தமிழும்
- வைணவ உரைவளம்
- வைணவ புராணங்கள்
Remove ads
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads