மகரம் மயங்கா னகரத் தொடர்மொழி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகரம் என்னும் சொல் 'ம்' என்னும் மெய்யழுத்தைக் குறிக்கும். மொழியின் [1] இறுதியில் வரும் மகரம் னகர எழுத்தாக மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு - அறம் செய்யான் அறன் அழீஇ, அறன் வலியுறுத்தல், புறனடை - என்பன மயங்கி வந்தன.
இப்படி மயங்காமல் வரும் னகரத் தொடர்மொழிகள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [2]
இவற்றிற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் தரும் சொற்கள் இவை.

அழன் [3], எகின் [4] [5], குயின் [6], செகின் [7] பயின் [8], புழன் [9], விழன் [10], கடான் [11] [12], வயான் [13] - இவை இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள்.

எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் - ஆகியவை ன்-ம் மயங்காத சொற்களுக்கு நச்சினார்க்கினியார் தரும் எடுத்துக்காட்டுகள். [14]

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads