பகத் சிங்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

பகத் சிங்
Remove ads

பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907[1]மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார். சாஹீது என்றால் மாவீரர் எனப் பொருள்படும். இவரை இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுவதுண்டு.[4]

விரைவான உண்மைகள் பகத் சிங்Bhagat Singh ਭਗਤ ਸਿੰਘ بھگت سنگھ, பிறப்பு: ...
Thumb
பஞ்சாப் மாநிலத்தில், பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தபார் ஆகியோர்களின் சிலைகள்

பகத் சிங் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் பற்றி படிக்கத் தொடங்கி பொதுவுடமைக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறையில் இருந்தபோது ஏனைய பிரித்தானியக் கைதிகளுக்கு இணையாக இந்தியக் கைதிகளுக்கும் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

பகத் சிங் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக 24 வயதில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.[6] பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு அவர் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவராக மாறினார் என்பதைக் கடிதம் மூலம் தெரிவித்தார். அக்கடிதம் பின்னர் Why I am an atheist என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழில் இந்நூல் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில் வெளியானது.

Remove ads

இளமை

பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங், சுவரன் சிங் ஆகிய அவரது இரு மாமன்கள், சிறையிலிருந்து வெளியான நாளாக அமைந்தது.[7] இவர் விடுதலைப்போராட்ட வீரர்களைக் கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.[8] இவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப்[9] பின்பற்றுபவராக இருந்தார். இது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.[10] பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர்.[11]

பகத்சிங் தன் வயதை ஒத்த பல சீக்கியர்களைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை.[12] ஆதலால் அவர் ஓர் ஆரிய சமாஜ பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[13]

1919-இல், பகத்சிங்குக்கு பன்னிரெண்டு வயதாகும்போது, ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார்.[14] தனது பதினான்காம் வயதில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 20-ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார்.[15] பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.[16]

1923-இல், பகத்சிங் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார்.[13] மார்ச் 1926-இல் நவஜவான் பாரத சபாவை (ஹிந்தியில் இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார்.[17] ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்பூருக்கு சென்றுவிட்டார்.[13] அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.[13]

பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927-இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சுமத்திக் கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.[18]

பகத்சிங் அம்ரித்சரிலிருந்து வெளியான உருது, பஞ்சாபி நாளிதழ்களில் எழுத்துப் பணியும் தொகுப்புப் பணியும் செய்தார்.[19] மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார். [17] செப்டம்பர் 1928-இல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவரகாவும் உருவெடுத்தார்.[13]

Remove ads

பிந்தைய புரட்சி நடவடிக்கைகள்

லாலா லஜபதி ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்

1928-இல், ஆங்கிலேய அரசு இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க சைமன் ஆணையக்குழுவை நிறுவியது. ஆனால், இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனைப் புறக்கணித்தன. அவ்வாணையம் 30 அக்டோபர் 1928-இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அற வழியில் ஒரு அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால், காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களைத் தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே லாலா லஜபதி ராயைத் தாக்கினார். இத்தாக்குதலில் லஜபதி ராய் கடுமையாகக் காயமுற்றார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928-இல் காலமானார். இத்தாக்குதலைப் பற்றி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு லஜபதி ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.[20][21] பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை[18] என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு[20] சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார்.[17] எனினும், பகத்சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்சைச் சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.[22]

மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது,

பகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார். சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.[23]

Remove ads

தப்பிச் செல்லுதல்

சான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார்.

பகத்சிங்கின் தூக்குத்தண்டனை

பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.[24][25]தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில் (காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads