பக்கிரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஃபக்கீர் அல்லது ஃபக்கிரி (Fakir or Faqir) (/fəˈkɪər/; அரபி: فقیر, இசுலாமிய சூபித்துவத்தை கடைபிடித்து, பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்து, இறைவனைக் குறித்த ஆன்மிகத் தேடலில் வாழும் இசுலாமியத் துறவி என்று பொருள்.

துறவு வாழ்கையைக் கொண்ட பக்கிரிகள் இறைவனை அதிகம் தொழுது கொண்டும் இறைவனின் திருப்பெயர்களை மனதில் ஜெபித்துக் கொண்டும் இருப்பர்.[1]
வரலாறு
இசுலாமிய உமையாக்களின் [2] ஆட்சிக் காலத்தில் (661–750) இசுலாமிய சமுதாயத்தில் சூபித்துவம் மலர்ந்தது. சூபித்துவ ஃபக்கிரிகள் உலக போகங்களை வெறுத்து, இறைவனை மட்டும் இலக்காகக் கொண்டு மக்களிடம் பிச்சையெடுத்து உண்டு, தூய ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டனர். பக்கிரிகள் இசுலாமிய சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக இருந்தனர்.
பக்கிரி எனும் சொல் இந்து பௌத்த சமயங்களில் சந்நியாசி, சாது, குரு, சுவாமி மற்றும் யோகிகளைக் குறிக்கிறது.[3]
இந்தியத் துணைக் கண்டத்தில் பக்கிரி எனும் சொல் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் முதலில் பிரபலமானது. கி. பி. நான்காம் நூற்றாண்டில் வட இந்தியாவின் நாக சாதுக்களை பக்கிரிகள் என பாரசீக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[4]சீரடி சாயி பாபா ஒரு பக்கிரி போன்று வாழ்ந்தவர்.
வடஇந்தியாவில் பக்கீர் எனும் சாதியினர் தர்காக்களில் பணி செய்து வாழ்கின்றனர்.
இந்த கலாச்சாரத்தின் பரிணாம மாற்றங்களின் தற்கால மிச்சமாக தமிழகத்தில் பல ஊர்களில் இன்றும் ஃபக்கிர்சா மற்றும் ஃபக்கீர்மார் என அறியப்படும் வகையினரைக் காணலாம்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads