பக்சி குலாம் மொகமது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்சி குலாம் மொகமது (Bakshi Ghulam Mohamed, 1907-15 சூலை 1972) இந்தியாவின் வடமுனையில் உள்ள சம்மு காசுமீர மாநிலத்தின் தலைமை அமைச்சராக 11 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்த அரசியல்வாதி ஆவார். சேக் அப்துல்லா பதவி விலக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதால் பக்சி குலாம் மொகமது 1953 இல் மாநிலத் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிய பக்சி குலாம் மொகமது சம்மு காசுமீர இசுலாமிய மக்களின் அரசியல் உரிமைகளைப் போராடிப் பெறுவதற்கு சேக் அப்துல்லாவுடன் இணைந்து செயல்பட்டார். 1930 இல் முசுலீம் மாநாடு என்னும் பெயரில் உருவானது. தொழிலாளர்கள் மாணவர்கள் ஆகியோரை உருங்கிணைத்து பக்சி குலாம் மொகமது சங்கங்களை உருவாக்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறைக்குச் சென்றார். சில காலம் தலைமறைவாகவும் இயங்கினார். முசுலீம் மாநாடு என்பது பின்னர் தேசிய மாநாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
1947 இல் சம்மு காசுமீர மாநில தலைமை அமைச்சரான சேக் அப்துல்லாவின் அமைச்சரவையில் துணை தலைமை அமைச்சராக பக்சி குலாம் மொகமது பதவி வகித்தார். 1953 ஆகத்து 8இல் சேக் அப்துல்லா பதவி நீக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட நிலையில் பக்சி குலாம் மொகமது சம்மு காசுமீர மாநில தலைமை அமைச்சராகி தொடர்ந்து 11 ஆண்டுகள் அப்பதவியில் பணியாற்றியதும் சவகர்லால் நேரு விருப்பத்திற்கு இணங்கப் பதவி விலகினார். 1964இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சில மாதங்களில் உடல் நலக் கேட்டின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். 1964 ஆம் ஆண்டில் அரசியலிலிருந்து விலகினார்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads