பசவகல்யாணக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசவகல்யாணக் கோட்டை (Basavakalyana fort), இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பீதர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் "கல்யாணக் கோட்டை" என அழைக்கப்பட்டது. இதன் வரலாற்றுச் சிறப்பு 10 ஆம் நூற்றாண்டு காலத்தியது. 10 ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர்களின் தலைநகரம் மன்யகேடாவிலிருந்து கல்யாணுக்கு மாற்றப்பட்டது. பசவகல்யாண நகரின் முக்கியப்பகுதியாக விளங்கும் இக்கோட்டை, வீரசைவ சமுதாயத்தை நிறுவிய பசவண்ணரின் கர்மபூமி என்ற சிறப்புமுடையது. [1][2][3][4]
வீர சைவ சமுதாயத்தைத் தோற்றுவித்த பசவண்ணரால் இக்கோட்டை 12ஆம் நூற்றாண்டின் சமுதாய, சமய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மேலும் கல்வியில் சிறந்தும் விளங்கியது. இந்து சமயத்தின் சாதியம் மற்றும் பழங்கொள்கைகளை எதிர்த்துப் புதிய சீர்திருத்த சமயமாக வீர சைவத்தைத் தோற்றிவித்த பசவண்ணர் மற்றும் அக்கா மகாதேவி, சன்னபசவண்ணர் (Channabasavanna), சித்தராமர் போன்ற பல சரணர்களுக்கும் பசவகல்யாணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.[5]
Remove ads
புவியமைவிடம்
சராசரியாக 2,082 அடிகள் (635 m) உயரத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது. இதன் ஆள்கூறுகள்: 17.87°N 76.95°E.[6]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads