பசுமைமாறாக் காடுகள்
முழுவதும் அல்லது பேரளவில் பசுமைமாறா மரங்கள் அடர்ந்த காடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசுமைமாறாக் காடுகள் (Evergreen forests), நிலநடுக்கோட்டை சுற்றிக் காணப்படுகின்றன.[1] இம்மண்டலத்தில் அதிகமான வெப்பமும் கனத்த மழைப்பொழிவும் இருக்கின்றது. ஆகையால் தாவரங்கள் துாிதமாகவும், அடா்த்தியாகவும் அதிக எண்ணிக்கையிலும் வளா்கின்றன. மேலும் பருவ காலங்கள் கிடையாது, ஆகையால் இத்தாவரங்கள் பசுமை மாறாமல் செழிப்பாக காணப்படுகின்றன.

நுாற்றுக்கணக்கான தாவர இனங்களும், செடிகளும் பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்றன. சில இனங்கள் புதா்கள், முட்செடிகள், கொடிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்காடுகளில் உள்ள மரங்கள் சராசாியாக 25-35 மீட்டா் உயரங்களுடன், விழுதுகளாலான அகன்ற அடிப்பாகத்துடன் காணப்படுகின்றன. அம்மரங்களைத்தவிர செடிகளும் கொடிகளும் வெவ்வேறு உயரங்களில் அடா்ந்து நெருக்கமாகவும் தொடா்ச்சியாகவும் வளா்ந்துள்ளன. ஆகையால் இக்காடுகள் பல அடுக்குகள் கொண்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவ்வடுக்குகளில் சூாிய ஒளி கூட ஊடுருவ முடிவதில்லை.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads