பச்சா நக்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பச்சா நக்மா (Bacha Nagma) என்பது முக்கிய நாட்டுப்புற நடன வடிவங்களில் ஒன்றாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. காஷ்மீரின் சில பகுதிகள் இந்த நடனம் பச்சா கியாவான் என்ற பெயரில் நன்கு அறியப்படுகிறது. [1] காபூலின் ஆப்கானியர்கள் இந்த நடனத்தின் முன்னோடியென பெருமை பெற்றுள்ளனர். இது ஹபீசா நக்மாவின் வழித்தோன்றல் ஆகும். [2]
நடனம்
பச்சா நக்மா நடனத்தின்போது, சிறு வாலிபன் ஒருவன் ,பெண் நடனக் கலைஞராக உடையணிந்து, ஹபீசா பாணியில் நடனமாடியும், பயிற்சி பெற்ற காஷ்மீரி பேலாட் பாட்டினை பாடியும் நடனமாடுகிறான். இந்த நடனம் கிராமங்களில் முக்கியமாக அறுவடை நேரத்தில் பிரபலமாக உள்ளது. நீண்ட பாவாடைகளில் பெண்களாக மாறுவேடமிட்டுச் செல்லும் சிறுவர்களால் சமூகக் கூட்டங்கள் மற்றும் விருந்துகளில் நிகழ்த்தப்படுவதற்கும் இது பிரபலமானது. வீடுகளில் திருமண கொண்டாட்டங்களின் போது அல்லது ஜீலம் ஆற்றில் படகுகளில் திருமண ஊர்வலங்கள் நடத்தப்படும் போது பச்சா நக்மா காஷ்மீரில் பொதுவானது. இந்த நடன வடிவம் மிகவும் பாராட்டப்படுகிறது. இது ரபாப், சாரங்கி, முரசு போன்ற கருவிகளுடன் நிகழ்த்தப்படுகிறது. இது ஹபீசா நடன வடிவத்தைப் போலவே விரைவான சுழல் இயக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் கதக் நடன வடிவங்களையும் இது ஒத்திருக்கலாம். பாடல் மற்றும் நடனமான இது பச்சா நக்மா ஜஷான் குழந்தை நடனக் கொண்டாட்டம் என்று அழைக்கப்படுகிறது. [3] தற்போது, திருமண கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமான பாடல்-நடனம். தி பச்சா-கிட் என்று அழைக்கப்படும் நடனக் கலைஞன் பல வண்ண ஃபிராக் போன்ற உடையில் ஒரு பெண்ணைப் போல எப்போதும் உடையணிந்து இருப்பான். [4]
இந்த நடனம் காஷ்மீரின் நாட்டுப்புறங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இது விருந்துகளின் போது நிகழ்த்தப்படுகிறது .மக்கள் ஒன்றுகூடுமிடங்கள், திருவிழாக்கள் மற்றும் மத சந்தர்ப்பங்களில், நடனம் நடத்தப்படுகிறது. மிகவும் உரத்த இசையுடன் கலைஞர்களின் மகிழ்ச்சியான இயக்கங்களால் பார்வையாளர்களை மகிழ்விக்கிறார்கள். இந்த நாட்டுப்புற நடன வடிவம் பழைய நாட்களில் பொழுதுபோக்குக்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும். காலப்போக்கில், மக்கள் தங்களை மகிழ்விக்க பல வழிகளை இதில் புத்தி வருகின்றனர். [3] ஆனால் இந்த பச்சா நக்மா நடனம் ஒரு நாட்டுப்புற நடன வடிவமாக பல இடங்களில் இன்றும் உள்ளது. இது காஷ்மீர் கலாச்சாரத்தின் பிரதான அங்கமாக கருதப்படுகிறது. பச்சா நக்மாவுக்கு முன்பு மற்றொரு வகை கொண்டாட்டம் மிகவும் பிரபலமானது - ஹபீஸ் நக்மா, 'பெண் நடனக் கலைஞரின் பாடல்' என்பதாகும். [5]
Remove ads
சொற்பிறப்பு
"பச்சா நக்மா" என்ற சொல் பச்சா: பாரசீக மொழியில் பச்சே என்பதிலிருந்தும், சமஸ்கிருதத்திலிருந்து வத்சா (சிறுவன், குழந்தை, மகன்) என்ற இரண்டு வெவ்வேறு சொற்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இறுதியில் இதிலிருந்து இந்திமொழியில் பச்சே ( “கன்று, குழந்தை, சிறுவன்”) என உருவானது. நக்மா: ஒரு மெல்லிசை அல்லது ஒரு பாடல் என்பதாகும். ஒட்டுமொத்தமாக குழந்தையின் நடனம் என்று பொருள்.
இசை மற்றும் கருவிகள்
இவ்வகை நடனத்துடன் வரும் பாடல்களை கேட்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களும் ஹபீசா நடனத்துடன் பாடப்பட்ட பாடல்களுக்கு ஒத்தவை, அதாவது சூபி கலாம் அல்லது பாடல்களில் எழுதப்பட்ட பாடல்கள் ஆகும். தெய்வீக சக்தி மற்றும் ஆவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாடல் வடிவம் சூபி கலாம் ஆகும். மற்ற பாடல்களில் பாரசீக இலக்கிய பாணியை ஒத்த வரிகள் உள்ளன. இப்போதெல்லாம் பாடல்கள் ஒரு வேடிக்கையான கருப்பொருள் அல்லது நகைச்சுவை அம்சங்களைக் [1] குறிக்கும் வகையில் இயற்றப்படுகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads