பச்சைக் குதிரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பச்சைக் குதிரை ஒரு சிறுவர் விளையாட்டு. வாலிபர்களும் ஒத்த பருவத்தினரோடு இதனை விளையாடுவது உண்டு. பெரும்பாலும் இது நிலா வெளிச்சத்தில் நடைபெறும்.


இந்த விளையாட்டின் முதல் படி பிறருடைய காலைத் தாண்டுவதில் தொடங்கும். அதனால் இந்த விளையாட்டுக்குக் கால்தாண்டி விளையாட்டு என்னும் பெயரும் உண்டு.
கால்தாண்டி
குனிந்திருப்பவர் படிப்படியாக தன் நிலையை உயர்த்துவார். இதனால் தாண்டுவோர் தாண்ட வேண்டிய உயரம் கூடிக் கொண்டே போகும்.
- ஒருகால் பாதம்,
- ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டுகால் பாதம்,
- இரண்டு பாத உயரத்தின் மேல் ஒரு சாண்,
- இரண்டு பாத உயரத்தின் மேல் இரண்டு சாண்
எனக் கால்தாண்டியின் உயரம் உயர்ந்துகொண்டே போகும்.
ஆள்-தாண்டல்
கால் தாண்டலுக்குப்பின் ஆள்-தாண்டல். நடைபெறும். இதில் குனிந்துகொண்டு நிற்பவரை அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்டவேண்டும்.
- குனிந்துகொண்டு நிற்பவர் தலையைத் தொங்க விட்டுக்கொண்டு குனிந்திருக்க வேண்டும். அப்படிக் குனியாவிட்டால் தலையை வெட்டி நாய்க்குப் போடு என்று சொல்லித் தலையைத் தட்டிக் குனியச் செய்வர்.
- தாண்டுபவர் தன் இரு கால்களையும் அகற்றி ஒருகால் அவரது தலையையும் மற்றொருகால் அவரது இடுப்பையும் தாண்டி வருமாறு தாண்டுவர்.தாண்டுவர் ஓடிவந்து தாண்ட இயலாது. குனிபவர் கைகளால் ஒரு பாவம் (4 முழம்) இடைவெளியில் அடுத்தவர் நிற்பார்.
- கால்-கட்டைவிரலைப் பிடித்துக்கொண்டு நிற்றல்,
- கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (கரண்டை),
- முழங்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (மோளி),
- துடையைப் பிடித்துக்கொண்டு நிற்றல்,
- கைகளைக் கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக்கொண்டு குனிந்து நிற்றல்
என ஆள்-தாண்டியின் உயரம் படிப்படியாக உயரும்.
Remove ads
குனிதல்
தாண்டுபவர் தான் தாண்டி முடித்த பின்னர் பிறர் தாண்டுவதற்காக முறைப்படி அமர்ந்தகொள்ளவேண்டும், அல்லது குனிந்துகொள்ளவேண்டும். இதனால் எல்லாரும் எல்லாரையும் தாண்டியாகவேண்டிய கட்டாய நிலை உண்டாகும்.
தவறியவர்
ஒருவர் எந்த நிலையில் யாரைத் தாண்டு இயலவில்லையோ அந்த நிலையிலிருந்து தன் தாண்டும் வாய்ப்பை இழப்பார். எனிலும் அவர் பிறர் தாண்டுவதற்குக் குதிரை ஆகி நிற்க வேண்டியது கட்டாயம்.
எல்லாத் தாண்டுதலும் முடிந்தபின் மறு ஆட்டம் தொடங்கும்.
இவற்றையும் பார்க்கவும்
கருவிநூல்
- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads