பஞ்சாக்கர மாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பஞ்சாக்கர மாலை [1] என்பது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் என்பவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது 60 வெண்பாக்களால் ஆன ஒரு சிறு நூல். [2]

Thumb
பஞ்சாக்கரம் என்னும் திருவைந்தெழுத்து

இந்த நூல் தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், சீவன்-முத்தர் பூசைக்-கிரமம் - என்று மூன்று பகுப்புகளைக் கொண்டுள்ளது.

பாடல் - எடுத்துக்காட்டு [3]

நல்ல நடை

கல்லேன் பிற நூல்கள் காழியர்-கோன் பாடல் அல்லால்
சொல்லேன் சுரரைத் தொழ நினையேன் - நல்ல சிறு
செஞ் சதங்கை கொஞ்சு தண்டைச் சிற்றடிகள் பாக எழுத்
தஞ் சதங்கை ஆம் அலகம் ஆம். [4]

கண்ணுடைய வள்ளலைத் துதிக்கும் பாடல்

காழி-நகர் வாழி கவுணியர்-கோன் தாள் வாழி
வாழி அருள் கண்ணுடைய வள்ளல் தான் - ஏழிசையின்
தெய்வத் தமிழ்ப் பாடல் வாழி திருநெறியாம்
சைவத்தவர் வாழி தான். [5]
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads