பஞ்ச்குலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்ச்குலா (Panchkula, இந்தி: पंचकूला) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா மாவட்டத்தில் திட்டமிடப்பட்டவாறு கட்டமைக்கப்பட்ட நகரமாகும். இது சண்டிகர் ஒன்றியப் பகுதியுடனும் மொகாலி நகரத்துடனும் தொடர்ச்சியான நிலப்பகுதியின் அங்கமாகும். சண்டிகரிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 4 கி.மீ. (2.4 மைல்கள்) தொலைவிலும் புது தில்லியிலிருந்து வடகிழக்கில் 259 கி.மீ. (162 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது. சண்டிகர்-மொகாலி-பஞ்ச்குலா பெருநகர வட்டாரம் கூட்டாக மூ-நகரம் எனப்படுகின்றது; இந்தக் கூட்டுப் பரப்பில் வாழும் மக்கள்தொகை 2 மில்லியனுக்கும் கூடுதலாக உள்ளது.
இந்த நகரத்தில் இந்தியத் தரைப்படையின் மேற்கு ஆளுகையின் தலைமையகம், சண்டிமந்திர் படைக் குடியிருப்பு (Chandimandir Cantonment), அமைந்துள்ளது. 2011இல் பஞ்ச்குலாவின் மக்கள்தொகை 561,293 ஆக இருந்தது.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads