பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்)

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர். இவர்களில் புலாகதனைத் தவிர்த்த மற்ற நால்வரும் தனக்கு முன்னிருந்த பாண்டியத் தளபதிகளை கொன்றே வட இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இலங்கையின் நிலைமை

பாண்டியர்கள் படை எடுப்புக்கு முன் வட இலங்கையை ஆண்டு வந்தவன் வாட்டகாமணி அபயன் எனப்படும் வலகம்பன் ஆவான். இவன் துட்டகைமுனுவின் தம்பியான சாத்த திச்சன் என்பவனுக்கு நாலாம் மகனாவான். வலகம்பனுக்கு முன் அவனது மூன்று அண்ணன்களான துலத்தானன், இலஞ்ச திச்சன் மற்றும் கல்லாட நாகன் முறையே அடுத்தடுத்து ஆட்சி செய்திருந்தனர். வலகம்பனுக்கு முன் ஆட்சி செய்த அவன் அண்ணனான கல்லாடநாகனை அவனது அமைச்சனான காமகாரத்தகன் என்னும் மகாரத்தகன் கொன்று ஆட்சியை பிடித்தான். அதன் காரணத்தால் காமகாரத்தகனை கொன்று வலகம்பன் மீண்டும் ஆட்சியை பிடித்ததுடன் கல்லாட நாகனின் மகனான மகாசூலிகனை தத்தெடுத்து அவனின் தாயான அனுலா தேவியை தன் அரசியாகவும் ஆக்கிக்கொண்டான். இவனுக்கு சோமதேவி என்ற இன்னொரு துணைவியும் உண்டு. இவன் கி.மு. 103ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆட்சியை பிடித்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தபோது அவனின் ஆட்சியில் உள்ள திச்சன் என்னும் பிராமணன் வலகம்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினான்.

Remove ads

தமிழகத்தில் இருந்து படை எடுத்தல்

பிராமண திச்சன் கிளர்ச்சியில் இறங்கிய நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஏழு பாண்டிய தளபதிகள் அநூராதபுரத்தின் மீது படை எடுத்தனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த்து பிராமண திச்சன் ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்கும் படி வலகம்பனிடம் எச்சரிக்கைத் தூதனுப்பினர். வலகம்பன் பிராமண திச்சனுக்கு படையெடுத்த ஏழு தமிழர்களையும் நீ வென்றால் உனக்கே ஆட்சியை அளித்து விடுகிறேன் என தூதனுப்பினான். பிராமண திச்சன் ஏழு பாண்டியர்களையும் எதிர்த்து தோல்வி அடைந்தான். வலகம்பனும் பாண்டியர்களை எதிர்த்து கொலம்பாலகத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தான்.

ஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன் வலகம்பனின் மனைவியான சோம தேவியையும் இன்னொருவன் புத்தரின் பத்து சக்திகளும் அடங்கி இருந்த புனிதக் கிண்ணத்தையும் தமிழகத்துக்கு எடுத்துச் சென்றனர். மற்ற ஐந்து பாண்டியர்களும் தங்களில் ஒருவனான புலாகதன் கீழ் வட இலங்கையில் ஆட்சியை அமைத்தனர். வலகம்பன் உருகுணைக்கு தப்பிச் சென்று தானசிவன் என்ற முனிவனிடம் அடைக்கலம் புகுந்து தென்னிலங்கையில் மறைந்து வாழ்ந்து வந்தான்.

Remove ads

ஆட்சியாளர்கள்

புலாகதன்

விரைவான உண்மைகள் புலாகதன், ஆட்சி ...

புலாகதன் என்பவன் வட இலங்கையின் வலகம்ப அரசின் மீது படை எடுத்த ஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன். முதலில் இவனின் கீழே வட இலங்கையில் பாண்டியத் தளபதிகளின் ஆட்சி அமைக்கப்பட்டது.[1] இவன் கி.மு. 103 முதல் கி.மு. 100 வரை வட இலங்கையை ஆண்டான். தன்னுடன் தமிழகத்தில் இருந்து படை எடுத்து வந்த 6 தளபதிகளில் ஒருவனான பாகியனை தன் அமைச்சனாக ஆக்கினான். இறுதியில் பாகியனாலேயே கொல்லவும்பட்டான்.[2]

பாகியன்

விரைவான உண்மைகள் பாகியன், ஆட்சி ...

பாகியன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் இரண்டாமானவன். இவன் கி. மு. 100 முதல் கி. மு. 98 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான புலாகதன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பாண்டிய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.[2]

பாண்டிய மாறன்

விரைவான உண்மைகள் பாண்டிய மாறன், ஆட்சி ...

பாண்டிய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் மூன்றாமானவன். இவன் கி. மு. 98 முதல் கி. மு. 91 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாகியன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பழைய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.[2]

பழையமாறன்

விரைவான உண்மைகள் பழையமாறன், ஆட்சி ...

பழைய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் நான்காமானவன். இவன் கி. மு. 91 முதல் கி. மு. 90 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாண்டிய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த தாட்டியன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.[2]

தாட்டிகன்

விரைவான உண்மைகள் தாட்டிகன், ஆட்சி ...

தாட்டிகன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் கடைசி மன்னனாவான். இவன் கி. மு. 90 முதல் கி. மு. 88 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பழைய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றினான். பிற்பாடு இவனோடு படை எடுத்து வந்த மற்ற ஆறு பாண்டியத் தளபதிகளும் சேர்ந்து முறியடித்த வலகம்பனே இவனைக் கொன்று மீண்டும் வட இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினான். பிற்பாடு வலகம்பன் 12 ஆண்டுகள் வட இலங்கயை ஆண்டான்.[2]

Remove ads

மூலம்

  • மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)


மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads