படாக்சான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
படாக்சான் மாகாணம் (Badakhshan) (பாரசீகம்: بدخشان ), ஆப்கானித்தான் நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்று. இம்மாகாணம் 28 மாவட்டங்கள் கொண்டது. இதன் தலைநகரம் பைசாபாத் நகரம் ஆகும். இம்மாகாணம், ஆப்கானித்தானின் வடகிழக்கில் இந்து குஷ் மற்றும் ஆமூ தாரியா பகுதிகளுக்கிடையே அமைந்துள்ளது.

Remove ads
புவியியல்
படாக்சான் மாகாணத்தின் வடக்கிலும் கிழக்கிலும் தாஜிகிஸ்தான் நாட்டின் கோர்னோ-படாக்சான் தன்னாட்சிப் பகுதி மற்றும் காட்லான் மாகாணத்தை எல்லையாகக் கொண்டது. இதன் மொத்தப் பரப்பளவு 44,059 சதுர கிலோ மீட்டராகும். இம்மாகாணத்தின் பெரும்பகுதிகள் இந்து குஷ் மற்றும் பாமிர் மலைத்தொடர்களுக்கிடையே அமைந்துள்ளது.
பொருளாதாரம்

படாக்சான் மாகாணம், உலகப் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும். அபினி பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயையே இம்மாகாணத்தின் ஒரே பொருளாதாரமாகும். இம்மாகாணத்தின் சுரங்கங்களில் சிறிதளவு நீல நிற நவரத்தினக் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
மக்கள் தொகையியல்
படாக்சான் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 8,89,700 என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் பஷ்தூ மொழி, பாரசீக தாரி மொழி மற்றும் தாஜிக் மொழிகளாகும். சன்னி இசுலாமியர் அதிகம் வாழ்கின்றனர்.
படாக்சான் மாகாணத்தின் மாவட்டங்கள்
- அர்காஞ்ச் குவா மாவட்டம்
- ஆர்கோ மாவட்டம்
- பாஹாராக் மாவட்டம்
- தாரயீயும் மாவட்டம்
- தர்வாசு மாவட்டம்
- தர்வாசி பாலா மாவட்டம்
- பைசாபாத் மாவட்டம்
- இஷ்காசிம் மாவட்டம்
- ஜுரும் மாவட்டம்
- காஷ் மாவட்டம்
- கவான் மாவட்டம்
- கிஷிம் மாவட்டம்’
- கோகிஸ்தான் மாவட்டம்
- கப் அப் மாவட்டம்
- குரான் வா முஞ்சன் மாவட்டம்
- ராக் மாவட்டம்
- ஷாக்ரி புசூர்க் மாவட்டம்
- சிக்னான் மாவட்டம்
- சீக்கி மாவட்டம்
- சுஹதா மாவட்டம்
- தாகாப் மாவட்டம்
- திஷ்கான் மாவட்டம்
- வாக்ஹான் மாவட்டம்
- உர்தூஜ் மாவட்டம்
- யாப்தாலி சுப்லா மாவட்டம்
- யாம்கான் மாவட்டம்
- யவான் மாவட்டம்
- சிபாக் மாவட்டம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads