படைமண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவது முக்கியமான அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்துக்கு மேலும், நடுவளிமண்டலத்துக்குக் கீழும் உள்ளது. படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் கீழே குளிர்ந்த அடுக்குகளும் மேலே சூடான அடுக்குகளுமாக அமைந்துள்ளது. இது, சூடான அடுக்கு கீழும், குளிர்ந்த அடுக்குகள் மேலேயும் காணப்படும் அடிமண்டல அடுக்கமைவுக்கு மாறானது. அடிவளிமண்டலத்துக்கும், படைமண்டலத்துக்கும் இடையிலான எல்லையாகிய மாறுமண்டல எல்லை (tropopause) இந்த மாற்றம் தொடங்கும் இடத்தைக் குறிக்கிறது. வளிமண்டல வெப்ப இயக்கவியல் அடிப்படையில் இது சமநிலை மட்டம் ஆகும். இடைத்தர நிலநேர்க்கோட்டுப் பகுதிகளில் படைமண்டலம் 10 கிலோமீட்டருக்கும் (6 மைல்) 50 கிலோமீட்டருக்கும் (31 மைல்) இடைப்பட்ட உயரத்திலும் காணப்பட, துருவப் பகுதிகளில் இது 8 கிலோமீட்டர் (5 மைல்) உயரத்தில் தொடங்குகிறது.
Remove ads
வெப்பநிலை
சூரியனிலிருந்து வரும் புறவூதாக் கதிர்களை உறிஞ்சி வெப்பமாவதால், படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் அடுக்கமைவு பெற்றுள்ளது. மேலிருந்து சூடாவதால், இப்படைமண்டலத்தில் உயரம் கூடும்போது வெப்பநிலையும் கூடுகிறது. இம்மண்டலத்தில் மேல் பகுதியில் வெப்பநிலை ஏறத்தாழ 270 கெல்வின் (−3°ச or 29.6°ப) ஆக உள்ளது. இது நீரின் உறைநிலைக்குச் சற்றுக் குறைவானது.[1]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads