பட்டமுகத்திண்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடிவவியலில் n-கோண பட்டமுகத்திண்மம் (trapezohedron) என்பது ஒரு இரும பலகோணத்திண்மம். இதன் 2n முகங்களும் சர்வசம பட்டவடிவ நாற்கரங்களாக இருக்கும். (இப்பட்ட வடிவ நாற்கரம் ஐக்கிய அமெரிக்காவில் டிரபீசியா (trapezia) என்றும் டிரபிசாய்ட் (trapezoid) என ஐக்கிய இராச்சியத்திலும் சில சமயங்களில் டெல்ட்டாய்ட் (deltoid) எனவும் அழைக்கப்படுகிறது.)
இத்திண்மத்தின் பெயரிலுள்ள n-கோண -என்ற பகுதி அதிலுள்ள முகங்களைக் குறிப்பதல்ல, ஒரு சமச்சீர் அச்சைச் சுற்றிய அதன் உச்சிகளின் அமைப்பைக் குறிக்கும்.
ஒரு n-கோண பட்டமுகத்திண்மத்தை இரண்டு n-கோண பிரமிடுகளாகவும் ஒரு n-கோண எதிர்ப்பட்டகமாகவும் (antiprism) பிரித்தெடுக்கலாம்.
Remove ads
வகைகள்
- மூன்றுகோண பட்டமுகத்திண்மம் – 6 (சர்வசம சாய்சதுர முகங்கள் – இரும எண்முகத்திண்மம்
- ஒரு கனசதுரம் சதுர முகங்கள் கொண்ட சிறப்புவகை மூன்று-கோண பட்டமுகத்திண்மம்.
- ஒரு மூன்று-கோண பட்டமுகத்திண்மம் சர்வசம சாய்சதுர முகங்கள் கொண்ட சிறப்புவகை சாய்சதுரத்திண்மம்
- நான்குகோண பட்டமுகத்திண்மம் – 8 பட்டவடிவ முகங்கள் – இரும எதிர்ப்பட்டகம்.
- ஐங்கோண பட்டமுகத்திண்மம் – 10 பட்டவடிவ முகங்கள் – இரும ஐங்கோண எதிர்ப்பட்டகம்.
- அறுகோண பட்டமுகத்திண்மம் – 12 பட்டவடிவ முகங்கள்– இரும அறுகோண எதிர்ப்பட்டகம்.
- எழுகோண பட்டமுகத்திண்மம் – 14 பட்டவடிவ முகங்கள் – இரும எழுகோண எதிர்ப்பட்டகம்.
- எண்கோண பட்டமுகத்திண்மம் – 16 பட்டவடிவ முகங்கள் – இரும எண்கோண எதிர்ப்பட்டகம்.
- நவகோண பட்டமுகத்திண்மம்' – 18 பட்டவடிவ முகங்கள் – இரும நவகோண எதிர்ப்பட்டகம்.
- தசகோண பட்டமுகத்திண்மம் – 20 பட்டவடிவ முகங்கள் – இரும தசகோண எதிர்ப்பட்டகம்.
- ...n-கோண பட்டமுகத்திண்மம் – 2n – இரும n-கோண எதிர்ப்பட்டகம்.
Remove ads
வெளி இணைப்புகள்
- Weisstein, Eric W., "Trapezohedron", MathWorld.
- Virtual Reality Polyhedra The Encyclopedia of Polyhedra
- VRML models (George Hart) <3> <4> <5> <6> <7> <8> [தொடர்பிழந்த இணைப்பு] <9> <10>
- Conway Notation for Polyhedra Try: "dAn", where n=3,4,5... example "dA5" is a pentagonal trapezohedron.
- Paper model tetragonal (square) trapezohedron
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads