பட்டம்பாங் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பட்டம்பாங் (Battambang) என்பது கம்போடியா நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். வடக்கில் பான்டே மீன்ச்சே, கிழக்கு மற்றும் தெற்கில் பர்சாட் , வடகிழக்கில் சீம்ரீப், மேற்கில் பைலின் ஆகிய மாகாணங்கள் எல்லைகளாக உள்ளன. மாகாணத்தின் மேற்கு எல்லையின் வடக்கு மற்றும் தெற்கு உச்ச எல்லைகள் தாய்லாந்துடனான சர்வதேச எல்லையின் ஒரு பகுதியாகும். நிலப்பரப்பின் அடிப்படையில் கம்போடியாவின் ஐந்தாவது பெரிய மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரம் பட்டம்பாங் ஆகும். பட்டம்பாங் நகரம் மாகாணத்தின் மிகப்பெரிய நகரம்.

இது கம்போடியாவில் அதிக மக்கட் தொகை கொண்ட ஐந்தாவது மாகாணமாகும்.[1] கம்போடியாவின் டோன்லே சாப் உயிர்க்கோள காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாகாணங்களில் பட்டம்பாங் ஒன்றாகும்.[2]  மாகாணத்தின் வளமான நெல் வயல்கள் விவசாய பொருளாதாரத்திற்கு பிரதானமாக பங்களிக்கின்றன. பட்டம்பாங் மாகாணத்தில் பல்வேறுப் பட்ட கலாச்சாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளன. எழுபத்தைந்து சதவீதம் பரப்பளவு காடுகள் மற்றும் மலைகள் ஆகும். இப்பகுதியில் வெப்பமண்டல காலநிலை நிலவுகின்றது.

Remove ads

சொற்பிறப்பியல்

பட்டம்பாங் என்பது கெமர் மொழியில் ‘ஊழியர்களை இழத்தல்' என்று பொருள்படும். அங்கோரியனுக்கு முந்தைய மற்றும் அங்கோரியன் காலங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இதுவரையில் "பட்டம்பாங்" என்று அழைக்கப்படும் சமகால கிராமங்கள், மாவட்டங்கள் எதுவும் குறிப்பிடப்பட்டதில்லை. ஆனால் மொஹச்சுன் கெமர் ஆவணத்தின் படி, ஸ்ரோக் பட்டம்பாங் (பட்டம்பாங் மாவட்டம்) அங்கோர் மற்றும் பிந்தைய அங்கோர் காலங்களில் பயன்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

Remove ads

நிர்வாகம்

பட்டம்பாங் 13 மாவட்டங்களாகவும், ஒரு நகராட்சியாகவும் 92 கம்யூன்களாகவும், 10 சங்கட்களாகவும் மற்றும் 810 கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்திற்குள் இரண்டு நகரங்கள் மற்றும் 12 துணை நகராட்சிகள் ஆகியவை அடங்கும்.

போக்குவரத்து

பட்டம்பாங்கை சாலை வழியாகவும், படகு மூலம் சங்கீயா நதி வழியாகவும் அணுகலாம். விமான நிலையம் மற்றும் தொடருந்து பாதை இரண்டுமே பயன்பாட்டில் இல்லை. பேருந்தில் புனோம் பென்னிலிருந்து 5-6 மணி நேர பயணத்திலும், சீம்ரெப் இருந்து 3-4 மணி நேர பயணத்திலும் சென்றடையலாம்.

வரலாற்றுத் தளங்கள்

வாட் ஏக் புனோம்

வாட் ஏக் புனோம் (கெமர் : ஏக் புனோம்மலை) பட்டம்பாங்கிலிருந்து 11 கி.மீ. வடக்கே ஒரு பகுதி இடிந்து விழுந்த 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஆகும். இந்த கோயில் 52 மீற்றர், 49 மீற்றர் அளவைக் கொண்டுள்ளது. ஒரு செந்நிற களிமண் சுவர் மற்றும் ஒரு பழங்கால நீர்த்தேக்கம் ஆகியவற்றின் எச்சங்களால் சூழப்பட்டுள்ளது. பால் பெருங்கடலை சித்தரிக்கும் ஒரு விட்டக்கல் மத்திய கோயிலின் கிழக்கு நுழைவாயிலுக்கு மேலே உள்ளது. இதன் மேல் பக்கவாட்டில் சில செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கோயிலுக்கு அடுத்ததாக உள்ளூர்வாசிகளால் ஒரு பெரிய அளவிலான புத்தர் சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது. இது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.[3]

வாட் பனன்

பட்டம்பாங் நகரத்திற்கு தெற்கே சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள வாட் பனன் (கெமர் : பனன் மலை) 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புனோம் பனனின் 11 ஆம் நூற்றாண்டின் மலை அங்கோர் இடிபாடுகளை பட்டம்பாங்கைச் சுற்றியுள்ள கெமர் கோவிலில் காணலாம். அங்கோர்வாட்டின் ஒரு சிறிய பதிப்பைப் போல ஐந்து கோபுரங்கள் உயர்ந்து வானத்தை நோக்கிச் செல்லும். மலையின் அடிவாரத்தில் ஒரு செந்நிற களிமண்ணினால் ஆன படிக்கட்டை எதிர்கொள்ளலாம். 350+ படிகளில் ஏறிய பிறகு அற்புதமான அமைதியான அமைப்பிற்குள் நுழையலாம்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads