பட்டம்

From Wikipedia, the free encyclopedia

பட்டம்
Remove ads

விண்ணில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருளே பட்டம் ஆகும். பொதுவாக இயந்திரத்தின் துணையின்றி காற்றின் விசையை மட்டும் கொண்டு பறக்கும் பொருட்களையே பட்டம் என்பர். காற்று பட்டத்தின் கீழிருந்து கூடிய விசையுடன் உந்தும்பொழுது பட்டம் மேலெழுகின்றது.

Thumb
Thumb
சிறுவர் செய்யும் பட்டம்

சிறுவர் விளையாட்டு

சிறுவர்கள் தமக்கு வேண்டிய பட்டங்களைத் தாமே செய்துகொள்வர்.
கடுதாசி (காகிதத்தாள்) விரிந்திருக்கும்படி சீவங்குச்சிகளை வளைத்து ஒட்டிப் பட்டம் செய்யப்படும்.
அதற்கு வால் என்று மெலிதாகக் கிழித்த துணி ஒன்றை ஒரு முனையில் கட்டுவர். வால் இல்லாத பட்டமும் உண்டு.
அதன் எதிர்முனையில் பறக்கவிடும் நூல் கட்டப்படும்.
பட்டத்தைத் தூக்கிக் காற்றடிக்கும் காலத்தில் காற்றில் பறக்க விடுவர்.
காற்று விசையால் உந்தப்பட்டுப் பட்டம் மேலே பறக்கும்.
பட்டம் கட்டிய நூலைச் சுண்டி பட்டத்தை அங்குமிங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர். இக்காலத்தில் வண்ணவண்ணப் பட்டங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Thumb
Remove ads

போட்டி விளையாட்டு

இக்காலத்தில் பட்டம் விடும் உலகத் திருநாளே நடைபெறுகிறது. இந்தியாவில் குசராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று (சனவரி 14 அல்லது 15) இந்த உலகத் திருவிழா நடைபெருகிறது.[1] பெரியவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

குறிப்புகள்

கருவிநூல்

இவற்றையும் பார்க்க

பட்டங்களின் வகைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads