பட்டினப்பாக்கம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டினப்பாக்கம் (Pattinapakkam)[1] ஒரு இந்திய தமிழ் திகில் திரைப்படம். இதனை அறிமுக இயக்குநர் ஜெயதேவ் எழுதி இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அனஸ்வர குமார் முன்னணி வேடங்களில் நடிக்க[3][4], சாயா சிங் மற்றும் ஜான் விஜய் துணைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். 2015 ஆம் ஆண்டு தயாரிப்பைத் தொடங்கிய இந்தப் படம், எதிர்பாராத சில தாமதங்களைச் சந்தித்து, படம் நவம்பர் 23, 2018 அன்று வெளியிடப்பட்டது.[5]
Remove ads
தயாரிப்பு
புதுமுக இயக்குநர் ஜெயதேவ், நடிகை பாவனாவின் சகோதரர் ஆவார். கலையரசன் கபாலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததன் விளைவாகவும், பின்னர் 2015இல் ஏற்பட்ட தென்னிந்திய வெள்ளத்தின் விளைவாகவும் படம் வெளியாவது இருமுறை தள்ளிப் போனது.
இசையமைப்பு
இஷான் தேவ் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை முருகன் மந்திரம் & வேல்முருகன் ஆகிய இருவரும் எழுதியிருந்தனர்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads