பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில் (Vithoba Temple), அதிகாரப்பூர்வமாக சிறீ விட்டலர்-ருக்மணி கோயில் (Shri Vitthal-Rukmini Mandir) (மராத்தி: श्री विठ्ठल-रूक्मिणी मंदिर என்பர். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் உள்ளது.[1] இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.
இக்கோயிலின் மூலவர் விட்டலர் ஆவார். தாயார் ருக்மணி ஆவார். இக்கோயிலின் முக்கிய கிழக்கு நுழைவாயில் விட்டல பக்தரான சோகா மேளரின் சிறு சமாதிக் கோயில் உள்ள்து. வைணவ சமயத்தின் வர்க்காரி நெறியைப் பின்பற்றும் மகாராட்டிரா வடக்கு கர்நாடகா, தெற்கு தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டவர்களுக்கு இக்கோயில் மிகவும் புனிதத் தலம ஆகும். மகாராட்டிராவின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் விட்டலர் மீதான பக்தி பஜனைப் பாடல்களுடன் பாடிக்கொண்டே ஊர்வலமாக, ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்று விட்டலர் கோயிலுக்குச் புனித யாத்திரையாகச் செல்வது வழக்கும்.
நாமதேவர், துக்காராம், ஞானேஷ்வர், புரந்தரதாசர், சோகாமேளர் மற்றும் ஜனாபாய் போன்ற வைணவ அடியவர்களால் பகவான் விட்டலரின் குறித்து அபங்கம் எனும் பதிகங்கள் பாடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, 2014-ஆம் ஆண்டிலிருந்து, இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வைணவர்கள் இக்கோயிலில் பூசாரிகளாக பணியாற்றுகிறார்கள்.[2][3][4][5][6]
Remove ads
அமைவிடம்
இக்கோயில் புனேவிற்கு தென்கிழக்கே 211 கிலோ மீட்டர் தொலைவிலும், சோலாப்பூருக்கும் மேற்கே 74 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள் தொடருந்து நிலையம் சோலாப்பூரில் உள்ளது.
கோயில் அமைப்பு


பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயிலின் முக்கிய கிழக்கு நுழைவாயில் சந்திரபாகா ஆற்றை நோக்கி அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயில் அருகே சோகாமேளர், நாமதேவர் ஆகியோரின் சமாதிகள் உள்ளது. இவர்களது சமாதிகளை தர்சனம் செய்த பிற்கு கோயில் முதல் மண்டபத்தில் உள்ள விநாயகர், கருடன் மற்றும் அனுமாரையும் தர்சனம செய்த பின்னர் இரணடாம் கட்டமாக பஜனை கூடத்திற்கு செல்ல வேன்டும். பின்னர் சில படிகள் ஏறி மூன்றாம் கட்டமாக விட்டலரை தர்சனம் செய்ய மூல மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். கருவறையில் விட்டலர் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு, நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அனைவரும் விட்டலரின் பாதங்களை தொட்டு வணங்கி வழிபடலாம்.
ஆலயத்துக்கு நான்கு வாசல்கள் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலுக்கு நாமதேவர் வாசல் என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளைச் சிலை இங்கு உள்ளது. இந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளியிருக்கும் தத்தாத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து வருவது அழகியதொரு மண்டபம்.
வழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.
இந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது. இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.
கருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.
இக்கோயிலிலின் வேறு மண்டபத்தில் கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி தேவி, சத்தியபாமா, மகாலெட்சுமி மற்றும் ராதை மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களான நரசிம்மர், வெங்கடாஜலபதி ஆகியோர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. ராதை மற்றும் கோபியர்களுடன், பால கிருஷ்ணர் ராசலீலை ஆடுவது போன்று, பக்தர்கள் ஆடிப்பாடி விளையாடுவதற்கு, கோயிலில் தனியொரு மண்டபம் உள்ளது.
Remove ads
திருவிழாக்கள்
ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்றும் தென்னிந்தியா முழுவதும் வர்க்காரி[7] நெறி முறைப்படி பக்தர்கள் விட்டலர் மீது அபங்கம் எனும் பதிகங்களைப் பாடிக் கொண்ட கால்நடையாக யாத்திரை செய்து பண்டரிபுரத்தில் உள்ள விட்டலரை தரிசனம் செய்வது சிறப்பாகும்.
புராண வரலாறு
மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டி, வரவேற்றான். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைப் போட்டு உடைத்தாள்.
புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணன் புன்னகைத் தான். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான். பாண்டுரங்கனே! நீ எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினான், புண்டரீகன்.
கிருஷ்ணன் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா ஆற்றில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள் என்று அருளினான். புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரிபுரம் ஆகிவிட்டது.
Remove ads
பாண்டுரக விட்டலரின் அடியவர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads