பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bandaranaike International Airport) இலங்கையில் இருக்கும் பிரதான முக்கிய பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்.இரண்டாம் உலகப்போரில் இது ராயல் வானூர்திப் படையின் தளங்களில் ஒன்றாக அமைந்தது.இன்றளவும் இதில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான வானூர்திப் படைத் தளமும் அமைந்துள்ளது. இது 1970இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டது. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயர்மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப்பட்டது.இலங்கையில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் தெற்கு நகரான அம்பாந்தோட்டையில் அமைந்துள்ளது.
ஜூன் 24, 2001]] அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுகாப்புக்களை மீறி நுழைந்து 26 வர்த்தக மற்றும் போர் வானூர்திகளைச் சேதப்படுத்தினர்.
[[மார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில் உள்ள விமானப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டார்.[2]
Remove ads
வசதிகள்
நிறுத்தும் தளங்கள்
- நிறுத்தும் தளம் அல்பா : ஒன்பது நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது ஐந்து வெளியக மற்றும் நான்கு பாலவழி தளங்களைக் கொண்டது. இது ஒரே தடவையில் நான்கு போயிங் 747 மற்றும் ஐந்து ஏர்பஸ் ஏ 330-200 கையாளும் வகையில் அமைக்கப்பட்டதுடன் இதுவே முதன்முதலாக கட்டப்பட்ட நிறுத்தும் தளமாகும்.
- நிறுத்தும் தளம் பிராவோ : எட்டு நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது நான்கு பாலவழி மற்றும் நான்கு வெளியக தளங்களைக் கொண்டது. இது போயிங் 747 வரையான விமானங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏர்பஸ் ஏ380 விமானங்களை விமானங்களை கையாளுவதற்கு புனரமைக்கப்பட உள்ளது .
- நிறுத்தும் தளம் சார்லி : எட்டு நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது அணைத்து நிறுத்தும் தளங்களும் வெளியகதளங்களாகும். இதுவும் இது போயிங் 747 வரையான விமானங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏர்பஸ் ஏ380 விமானங்களை விமானங்களை கையாளுவதற்கு புனரமைக்கப்பட உள்ளது .
- நிறுத்தும் தளம் டெல்டா :நான்கு வெளியக நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது சிறியரக விமானங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டது.
முனையங்கள்
- முனையம் 1: 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இது பழமையான மற்றும் மிக பெரிய முனையமாகவும் உள்ளது. 12 வாசல்கள்கொண்ட இது வருகை மற்றும் புறப்படுதல் என பிரிக்கப்பட்டு. அனைத்து சர்வதேச விமானங்களையும் கையாளும் இம் முனையமானது பிரதான கட்டடத்துடன் இணைக்கப்படுள்ளது.
- முனையம் 2 : 2020 ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- முனையம் 3 : நவம்பர் 2012 ல் திறக்கப்பட்டது இது அனைத்து உள்நாட்டு விமானங்களையும் கையாளுகிறது.
- சரக்கு முனையம் : அக்டோபர் 2009 இல் திறக்கப்பட்ட இது அனைத்து சரக்கு விமானங்களையும் கையாளுகிறது.
ஓடுபாதை
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய ஒரேயொரு ஓடுபாதை (04/22) ஆனது 3,350 மீ நீளமானது . மேல்எழுதல் மற்றும் இறங்கும் தூரம் முறையே 3.441 மீ மற்றும் 3,350 மீ ஆகும். கூடுதலாக நவீனரக விமானமான ஏர்பஸ் ஏ 380 செயல்படுத்த விமான நிலையத்தில் 4000 மீ நீள இரண்டாவது ஓடுபாதை மீது முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏ 380 கையாள மற்றொரு நடையோடுபாதை[டாக்சி வே ] உருவாக்க ஒரு திட்டமும் உள்ளது. கூடுதலாக பி.ஐ.ஏ விரிவாக்கம் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது இது செயற்படுத்தப்படும் .
Remove ads
விரிவாக்கம்
புதிய முனையத்தின் கட்டுமானம் செப்டம்பர் / அக்டோபர் 2017 முதல் தொடங்கி 2020 இல் பூர்த்தி செய்யப்படும்.
விமானங்கள் மற்றும் முடிவிடங்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads