திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [கு 1] [1]
Remove ads
அமைவிடம்
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இறைவன்
இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர். [1] மலைமீது திருமலைக்காளி உள்ளார். [2]
சுந்தரர் பாடல்
“ | ஈழநாட்டு மாதோட்டந் தென்னாடு ராமேச்சுரம் சோழநாட்டுத் துருத்தி நெய்த்தானந் திருமலை |
” |
தல வரலாறு

முன் காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார். அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் என்பது செய்தி.[2]
Remove ads
அஷ்டபத்ம குளம்

மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைக்கின்றர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர், தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் எடுத்து முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. [2]
Remove ads
விசாக நட்சத்திர கோயில்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை. "வி' என்றால் "மேலான' என்றும், "சாகம்' என்றால் "ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்பது தொன்னம்பிக்கை. [2]
Remove ads
குறிப்புகள்
- குமரகுருபரன் 1972 டிசம்பர் இதழில் இத்தலம் வைப்புத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சில படங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads