பதுமனார் (சங்ககாலம்)
சங்க கால புலவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல்.
பாடல் சொல்லும் செய்தி
நட்டநடு நிசியில் எந்த அரவமும் இல்லை. எல்லாரும் நிம்மதியாக உறங்குகின்றனர். நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறேன்.
திருமண நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதால், தலைவி துடிக்கிறாள். தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
பாடல்
நள் என்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள், முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓஒர் யான் மன்ற துஞ்சாதோனே.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads