பதேபூர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பதேபூர் மாவட்டம்
Remove ads

பதேபூர் மாவட்டம் (Hindi: फ़तेहपुर ज़िला, Urdu: فتح پور ضلع) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 71 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் பரப்பு 4,152  சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் தலைமையகம் பதேபூர் நகரில் உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,675,384 (2011 கணக்கெடுப்பு). பதேபூர் இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இவ்வூர் புனித நதிகளான கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரைப் பற்றி புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பதேபூர் மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

பொருளாதாரம்

இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு, மத்திய அரசு வளர்ச்சி நிதி அளிக்கிறது. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பதேபூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. எனவே, இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்[1].

பிரிவுகள்

இது பதேபூர், பிந்துகி, காகா ஆகிய மூன்று வட்டங்களைக் கொண்டது. இந்த மாவட்டத்தை ஐரயா, அமௌலி, அசோதர், பகுவா, பிதவுரா, தியோமை, தாத்தா, ஹஸ்வா, ஹத்கம், கஜுஹா, மல்வன், தெலியாஇ, விஜயபுரி ஆகிய மண்டலங்களாக பிரித்துள்ளனர்.

மக்கள்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்போது, 2,632,684 மக்கள் வாழ்ந்தனர்.[2]. இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 154வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 634 inhabitants per square kilometre (1,640/sq mi).[2] மேலும் பதேபூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.05%.[2]. பதேபூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர்[2]. மேலும், பதேபூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.78 சதவிகிதமாகும்[2]. சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 634 பேர் வாழ்கின்றனர்.[2] ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 68.78% பேர் கல்வி கற்றவர்கள் ஆவர்.[2]

போக்குவரத்து

பதேபூர் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. பதேபூர் நகரம் கான்பூரில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான லக்னோவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கான்பூர், அலகாபாது, லக்னோ உள்ளிட்ட பிற நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. நாட்டின் பிற நகரங்களுக்கு ரயில் போக்குவரத்தும் உண்டு.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads